பல்லக்கில் போக விஜய் ஆசைப்பட்டால் போதுமா? தவெகவிடம் தாவ அதிமுக தலைவர் ரெடி? "தலை"க்கு திமுக சான்ஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் பல்லாக்கில் போக வேண்டும் என்று விஜய் முடிவு செய்துவிட்டால், தன்னை தூக்கி செல்பவர்கள் யார் யார் என்பதையும் விஜய்தான் முடிவு செய்ய வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர் ஆவின் வைத்தியநாதன் கருத்து கூறியிருக்கிறார்.. அத்துடன் அதிமுகவின் வைத்திலிங்கம், திமுக பக்கம் தாவுவாரா? என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் விரிவாகவே வைத்தியநாதன் பேசியிருக்கிறார்.

Realone Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அரசியல் விமர்சகர் ஆவின் வைத்தியநாதன், கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்குமே தவிர, ஓபிஎஸ் திமுகவுக்கு தாவுவாரே தவிர, வைத்திலிங்கம் திமுகவில் இணைய வாய்ப்பில்லை.. ஒருகாலமும் அதிமுகவுக்கு துரோகம் செய்ய மாட்டார்.. அதிமுகவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படக்கூடியவர் வைத்திலிங்கம்..

AIADMK DMK Vijay

இவர்களை எல்லாருக்கும் அதிமுகவில் இடமில்லை என்று சொல்லிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.. அதேபோல அதிமுகவுக்கான கதவை அடைத்துவிட்டது விஜய்யின் தவெக. அப்படியிருக்கும்போது, ஓபிஎஸ்ஸோ, வைத்திலிங்கமோ ஏன் இன்னமும் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்கவில்லை? என்று தெரியவில்லை.

விஜய் தவெக

இத்தனைக்கும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்தால் தொடர் தோல்வியைதான் இந்த முறையும் சந்திக்க நேரிடும் என்பதால், தொண்டர்கள் தவெக பக்கம் போகக்கூட தயாராகிவிட்டார்கள்..

ஆனால், அங்கே வெறும் ரசிகர் கூட்டமாகவே உள்ளதால், அதிமுக தொண்டர்கள் விஜய் கட்சியில் இணைய தயங்குகிறார்கள்.. அதிமுகவின் நான்கைந்து தலைவர்கள் விஜய் பக்கம் இருந்தால்தான், அவர்களை நம்பி அதிமுக தொண்டர்கள் செல்வார்கள்..

உதாரணத்துக்கு பண்ருட்டியார், செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி போன்ற தலைவர்கள் கூட்டணியாகவோ, அல்லது நேரடி கட்சிகளாக இருந்தால் அப்படியே அதிமுகவின் கோட்டையான வாக்கு வங்கி சரிந்துவிடும்.. எடப்பாடியிடம் உள்ள அத்தனை பேரும் அந்த கூட்டணிக்கு சென்றுவிடுவார்கள்..

பல்லக்கில் விஜய்

எனவே தவெக தலைவர் விஜய் செய்ய வேண்டியது, நம்பிக்கைக்குரிய தலைவர்களை தன் பக்கம் இழுக்க வேண்டும்.. அப்படி இழுத்தால்தான், விஜய்யால் அரசியல் செய்ய முடியும்.

தான் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்று விஜய் ஆசைப்படுவது நடக்க வேண்டுமானால், அதிமுகவில் இருந்தும், திமுகவில் இருந்தும் பட்டாளங்கள் கிளம்பி தவெகவுக்கு செல்ல வேண்டும். அதேபோல திருமாவளவனிடமும் ஒரு கூட்டம் உள்ளது.. அந்தவகையில் இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜய்யிடம் சென்றால், இந்த தலைவர்களை நம்பி அவர்களது தொண்டர்களும் சீறிப்பாய்வார்கள்..

நேர்மையான பண்ருட்டியார்

மொத்தத்தில் தவெகவுக்கு நல்ல அரசியல்வாதிகளும் தேவை என்பதால், பண்ருட்டியார், செங்கோட்டையன் போன்ற நேர்மையானவர்களை விஜய் தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும். தான் பல்லாக்கில் போக வேண்டும் என்று விஜய் முடிவு செய்துவிட்டால், தன்னை தூக்கி செல்பவர்கள் யார் யார் என்பதையும் விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால் ஆணித்தரமாக சொல்கிறேன், கையெழுத்து போட்டு தருகிறேன், வைத்திலிங்கம் திமுகவுக்கு செல்ல மாட்டார்.. அதற்காக அதிமுக பக்கம் வைத்திலிங்கம் போக மாட்டார் என்பதை எப்படி சொல்ல முடியும்? இப்போதுவரை வைத்திலிங்கமும், எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..

ஓபிஎஸ் அணியை துண்டித்துவிட்டு, வைத்திலிங்கத்தை அதிமுக பக்கம் வர சொல்கிறார்கள்.. ஆனால், வந்தால் ஓபிஎஸ்ஸூடன் வருவேன் என்று வைத்திலிங்கம் அடம் பிடித்து கொண்டிருக்கிறார்.

மனோஜ் பாண்டியன் - திமுக

ஆனால் மனோஜ் பாண்டியன் திமுகவுக்கு சென்றதற்கு வேறு காரணம் உள்ளது.. அதாவது சின்னம்மாவை வைத்து முக்குலத்தோர் அரசியலை முன்னெடுக்கவும்தான், மனோஜ் பாண்டியன் திமுகவுக்கு சென்றார்.. பிஎச் பாண்டியன் காலத்திலிருந்தே சின்னம்மா குடும்பத்துடன் ஒத்துவராது.

ஓபிஎஸ் நடுநிலைமை வகித்தபோதுதான், மனோஜ் பாண்டியன் அவருடன்தான் இருந்தார்.. ஓபிஎஸ்ஸின் சோதனை கட்டத்தில் எல்லாம் உடனிருந்தார்.. ஆனால், ஓபிஎஸ் ஜாதி அரசியலை முன்னெடுக்கவும்தான், மனோஜ் பாண்டியன் திமுக பக்கம் வரவேண்டியதாயிற்று.

மேலும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், தேர்தலில் சீட் உறுதியானதாலும் திமுக பக்கம் மனோஜ் பாண்டியன் வந்துவிட்டார்.. பிஎச் பாண்டியன், மனோஜ் பாண்டியன் குடும்பம் போல எடப்பாடியை எதிர்க்க தென்மண்டலத்தில் திமுகவுக்கும் வேறு யாரும் இல்லை.. எனவே இந்த இணைப்பு சாத்தியமாயிற்று" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+