ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிக்கல்..17ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..இபிஎஸ் வீட்டில் ஆலோசனை
ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 17ஆம் தேதி கூட உள்ளது.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17ம் தேதி கூடும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், அடிப்படை உறுப்பினர் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் முன்பு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். போர்க்களமாக மாறியது ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை. இதனையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டது.

ஓ.பன்னீர் செல்வம்
அதை ஏற்க மறுத்துள்ள ஓ.பன்னீர் செல்வம் தான் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமியை நீக்குவதாக அறிவித்தார். தன்னை நீக்கியது செல்லாது என்று கூறி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் ஜூலை 17ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அவரது இல்லத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரவுபதி முர்முவுக்கு ஆதரவு
வருகிற 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுக பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

எதிர்கட்சி துணைத்தலைவர் பதவி
இதனிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒ.பன்னீர் செல்வம் எம்எல்ஏவாக இருக்கிறார். எதிர்கட்சி துணைத்தலைவராகவும் இருக்கிறார். அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்
இதனிடைய தமிழக சட்டசபை சபாநாயகருக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும்படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தின் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவி நீடிக்குமா என இன்னும் சில நாட்களில் தெரியவரும்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications