கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டலை! அப்பாவு முடிவால் அப்செட்! ஆதரவாளர்களிடம் புலம்பிய ஆர்பி உதயகுமார்!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி தரப்பில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஆர்பி உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டாலும் பெயருக்கே அந்த பதவி இருக்கிறது. அடுத்த நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரிலும் ஓபிஎஸ்ஸே எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர்வார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ள நிலையில் ஆதரவாளர்களிடம் புலம்பி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது உட்கட்சி நிகழ்வுகள்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளார் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம். நீதிமன்றம் வரை சென்றும் பொதுக்குழுவை நிறுத்த முடியாத நிலையில் நினைத்ததை முடித்தார் இபிஎஸ்.

ஆர்பி உதயகுமார்
பொதுக்குழுவில் நத்தம் விஸ்வநாதன் கே பி முனுசாமி ஆகியோர் துணை பொது செயலாளர் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவரது முன்னாள் சிஷ்யரான ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்தார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த சில நாட்களாக நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று ஆர்பி உதயகுமாரும் பங்கேற்று வந்தார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
இதனால் உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள் மதுரை முழுக்க எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்பி உதயகுமாருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் பிளக்ஸ் என மாஸ் காட்டினர். அதே நேரத்தில் சபாநாயகர் அப்பாவு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் தாமதம் செய்த நிலையில், நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் சட்டமன்ற மாண்பு படி ஓ.பன்னீர்செல்வமே எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தொடர்வதாக அறிவித்ததோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

சபாநாயகர் அப்பாவு
இந்நிலையில் ஜனவரி 9ஆம் தேதி 2023ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட இருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த கூட்டத்தொடரின் போது அவர்களுக்கு குறிப்பு உரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வரவில்லை. அதனால் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை பொறுத்தவரை இதற்கு முந்தைய அதே நிலை (எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பது) தொடரும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார் என மறைமுகமாக தெரிவித்தார்.

அதிருப்தி
கடந்த முறை நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் முதல் நாள் அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அவையை புறக்கணித்தனர். இரண்டாவது நாளிலும் அதே விவகாரம் காரணமாக மோதலில் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அதிமுக உறுப்பினர்கள் மொத்தமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், ஐயப்பன் உள்ளிட்டோர் அவையில் இருந்தனர். இந்த நிலையில் இந்தக் கூட்டத் தொடரிலும் ஓ.பன்னீர்செல்வமே எதிர்க்கட்சி துணைத் தலைவராக பங்கேற்பார் என்பதை சபாநாயகர் அப்பாவு உறுதி செய்து இருக்கிறார்.

ஆதரவாளர்கள் புலம்பல்
எதிர்க்கட்சித் துணைத் தலைவரை சபாநாயகர் தான் அங்கீகரிக்க வேண்டும். தற்போதும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என ஆர்பி உதயகுமார் அவரது ஆதரவாளர்களும் கூறி வந்தாலும் தற்போது வரை ஓ.பன்னீர்செல்வமே எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர்கிறார். இதனால் ஆர்.பி.உதயகுமார் தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஆர் பி உதயகுமாரை ஓரங்கட்டி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரத்தில் எடப்பாடியின் ஆதரவு தனக்கு கிடைக்குமா என்பதும் அவரது கவலையாக இருக்கிறது. இதனால் ஓபிஎஸ்க்கு ஆதரவாக திமுக செயல்படுவதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். அவரும் ஆதரவாளர்களிடம் தனது கவலையை தெரிவித்துள்ளதாகக் கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications