எஞ்சியிருந்த தஞ்சை, பெரம்பலூர் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக
சென்னை: அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் எஞ்சியிருந்த தொகுதிகளான தஞ்சாவூர், பெரம்பலூருக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக சார்பில் பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில் பாமக, பாஜகவுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளில் 177 தொகுதிகளில் போட்டியிட இரு கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது. இதனிடையே ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் தங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டது.
ஆனால் அதிமுகவோ 6 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என கூறியது. இதனால் தேமுதிகவை போல் தமாகாவும் வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய தினம் அந்த 6 தொகுதிகளை தமாகா ஏற்றது. தமாகாவுக்கு திருவிக நகர், பட்டுக்கோட்டை, ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதில் லால்குடி தொகுதிக்கு நேற்றைய தினம் அதிமுக சார்பில் ராஜாராமன் என்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். தற்போது அந்த தொகுதியை தமாகா கேட்டு பெற்றதால் அந்த தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ராஜாராமன் வாபஸ் பெறப்படுகிறார்.
இதனால் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 3 தொகுதிகள் அதிமுகவசம் உள்ளன. அதில் இரு தொகுதிகளுக்கு தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். தஞ்சையில் அறிவுடைநம்பி, பெரம்பலூர்- இளம்பை இரா தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அதிமுக சார்பில் பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications