சிக்னல் கொடுத்த மேலிடம்! மன்னார்குடிக்கு பறக்கும் ‘தேனி’ எக்ஸ்பிரஸ்! தூதாகப் பறந்த மகளிரணி 'புள்ளி'!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சசிகலாவும் ஓ.பன்னீர் செல்வமும் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக சசிகலா தரப்பு மகளிர் அணி நிர்வாகி ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓபிஎஸ் அணி இன்று இருந்த அதிமுக தற்போது சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் அணி சிதறுண்டு கிடக்கிறது.
சசிகலா சிறை செல்ல நேர்ந்ததால் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி அதன் பின்னர் தனது சாதுரியமான அதே நேரத்தில் மிகவும் அமைதியான செயல்பாடுகள் மூலம் கட்சியிலும் ஆட்சியிலும் தனது இருப்பை உறுதி செய்து கொண்டார்.

அதிமுக பொதுக்குழு
இந்த நிலையில் அதிமுகவில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகார மோதல் தலைதூக்கியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை இலைகளாக இருப்பதாக அதிமுகவினர் கூறி வந்த நிலையில், அந்த கருத்தில் மண்னை அள்ளிப் போடும் விதமாக ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. இதனைடுத்து அன்று காலை வரை ஒன்றாக இருந்த ஓபிஎஸ்-இபிஎஸ் இருதுருவங்களாக மாறினர். போராட்டங்கள், அடிதடி, போலீஸ், நீதிமன்றம், பொதுக்குழு என கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் என்னென்னவோ நடந்து விட்டது.

எடப்பாடி பழனிச்சாமி
தற்போது அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அது தொடர்பான தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனிடைய சசிகலா டிடிவி தினகரனுடன் சேர்ந்து அதிமுகவை ஒன்றிணைக்க தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதனை சசிகலா தினகரன் ஆகிய இருவருமே வரவேற்று இருந்தனர். ஆனால் எப்போது இந்த சந்திப்பு நிகழும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சசிகலாவுடன் சந்திப்பு
அதே நேரத்தில் கோவையில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அப்போது அணிகள் இணைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் சசிகலா சந்திப்பினை உறுதி செய்யும் வகையில் ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கிறது. தற்போது ஓ பன்னீர்செல்வம் தேனியில் தங்கி இருந்து தனது ஆதரவாளர்களை சந்திப்பது பிற மாவட்டங்களில் ஆதரவு வட்டத்தை பெருக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தான் சசிகலா தரப்பு மகள்கணியை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மகளிரணி நிர்வாகி
சசிகலா தரப்பைச் சேர்ந்த மகளிர் அணி முக்கிய நிர்வாகியான அந்த நிர்வாகி ஓபிஎஸ்ஐ சந்தித்து பேசியதாகவும் அதிமுக பொதுக்குழுவில் தீர்ப்பு வந்தால் எப்படி செயல்படுவது பொது குழு தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக வந்தால் உடனடியாக சசிகலாவை சந்திக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சசிகலா கூறிய தகவல்களை ஓபிஎஸ் இடம் தெரிவித்ததாகவும், சசிகலா ஓப்பனில் செல்வம் சந்திப்பு விரைவில் இருக்கும் என்கின்றனர் தேனி ரத்தத்தின் ரத்தங்கள்.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications