Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழம்பிய குட்டையான அதிமுக.. செங்கோட்டையன் மூலம் வலை விரித்த விஜய்! சிக்கப் போவது யார்? யார்? பரபர!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். அதிமுகவின் மிக முக்கிய சீனியர்களில் ஒருவரான செங்கோட்டையன் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை பலமிழக்க செய்யும் வகையில் கட்சி தாவ வைக்க சில நிர்வாகிகளிடம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையன் விரித்த வலையில் வலையில் அதிமுகவில் யார்? யார்? சிக்க போகிறார்கள் என்பது அதிமுகவில் நிலவி வருகிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் திடீரெனத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின் முடிவால், அக்கட்சியில் பெரும் அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் மிக முக்கிய சீனியர் எனக் கருதப்பட்ட செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி கொண்ட நிலையில் வெளியேறியது, கட்சிக்குள் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

குறிப்பாக, செங்கோட்டையன் வெளியேறிய பின் அவர் யார்? யார்? தன்னுடன் இழுத்துச் செல்வார்? யாரெல்லாம் த.வெ.க.வில் இணைவார்கள்? என்ற கேள்விகள் அதிமுகவில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அதிமுகவில் செங்கோட்டையன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார் என்கின்றனர்.

AIADMK Sengottaiyan Vijay

அதிமுக பிரச்சனை

அதிமுகவில் முக்கிய தலைவர் என சொல்லிக் கொள்ளும் செங்கோட்டையன் மட்டுமே தவெகவுக்கு சென்றார், அவருடன் 32 பேர் தான் த.வெ.க.வில் சேர்ந்தனர். அதிலும் சிலர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கத் தயார் நிலையில் உள்ளனர் என்கிறார்கள். அதாவது, செங்கோட்டையன் பின்பற்றுவோரின் எண்ணிக்கை குறைவு என்பதையே அதிமுகவினர் அடிக்கடி வலியுறுத்திக் கூறி வருகின்றனர்.

செங்கோட்டையன் வெளியேற்றம்

அதிமுகவின் புதிய தலைமையாக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதலில் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை நீக்கினார். அதன் பிறகு ஓ.பி.எஸ்., வைத்தியலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், ஜேசிடி பிரகாஷ், அன்வர்ராஜா உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்தப் பட்டியலில் தற்போது செங்கோட்டையனும் சேர்ந்திருக்கிறார். ஆனால் ஒரு கட்சிக்கு புதிய தலைமை வந்தால், இவ்வாறு சீரமைப்புகள் நடப்பது சாதாரணம் தான் என்கிறார் அதிமுகவினர்.

எடப்பாடி

செங்கோட்டையனைப் பற்றியும் அதிமுக தரப்பு கடுமையாக விமர்சிக்கிறது. "ஜெயலலிதா காலத்தில் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட செங்கோட்டையனுக்கு, மீண்டும் அமைச்சர் பொறுப்பை கொடுத்தது எடப்பாடிதான். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு அவர் கட்சிக்குள் இருந்தபடியே பாஜக தலைவர்களைச் சந்தித்தார். பின்னர் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து அதிமுகக்கு துரோகம் செய்ததால் தான் நீக்கப்பட்டார்" என்கிறார்கள். "இவரைப் போன்றவர்கள் விலகுவது கட்சிக்கு பலமே தவிர பலவீனம் அல்ல" என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

அதிமுக சீனியர்கள்

இந்நிலையில், செங்கோட்டையனின் அடுத்தடுத்த நடவடிக்கைகளே தற்போது அதிமுகவின் முக்கிய விவாதமாக உள்ளது. குறிப்பாக, எடப்பாடிக்கு எதிராக அதிருப்தி கொண்ட சில மூத்த தலைவர்கள், குறிப்பாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரும், வட மாவட்டத்தை சேர்ந்த மற்றொருவரும் த.வெ.க. பக்கம் செல்லும் வாய்ப்பு உள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இவர்களின் பெயர்கள் தற்போது "சைலண்ட் மோடில்" பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

விஜய் தவெக

தற்போது த.வெ.க.வின் முதல் பணியாக, அதிமுகவில் அதிருப்தியாக இருக்கும் சில தலைவர்களை தங்களது பக்கம் திருப்புவது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த முயற்சியில் செங்கோட்டையன் தீவிரமாக செயல்படுகிறார் என்றே சொல்கிறார்கள். ஆனால், இது வெறும் வதந்தியா? அல்லது உண்மையிலேயே சில முக்கிய முகங்கள் த.வெ.க.விற்கு செல்லத் தயாராக உள்ளனவா? என்பதில் இன்னமும் தெளிவு இல்லை. சில நாட்களுக்குள் இது குறித்து தெளிவான விவரங்கள் தெரியும் என்றும், அதிமுக-த.வெ.க. அரசியல் சூழல் புதிய திருப்பத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+