2026க்கு அதிமுக எப்பவோ ரெடி..தவெக விஜய் உடன் கைகோர்க்கும் எடப்பாடி? எல்லாம் பிகே போட்ட ப்ளான் தானாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையேயான கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறுகின்றனர் அதிமுக நிர்வாகிகள். அதிமுகவின் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களில் கூட்டணி குறித்தும் குறிப்பாக விஜய் குறித்து மூத்த நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம் அப்படியே பேசினாலும் அது சாதகமாகத்தான் பேச வேண்டும் என உத்தரவு போட்டு இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

எதிர்பார்த்ததை விட கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான நிர்வாகிகளோடு விஜய் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், கட்சியின் முக்கிய முகங்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

AIADMK TVK vijay

வழக்கம் போல அனைத்து தொலைக்காட்சிகளும் விஜயின் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்தன. ட்விட்டர் உள்ளிட்ட சமூக சமூக வலைதளங்களிலும் விஜய் குறித்த பேச்சு தான். தொடர்ந்து அடுத்தடுத்து பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் விஜயை விமர்சிக்க தொடங்கி விட்டன.

அதிமுக -தவெக: ஆனால் அதிமுகவோ அமைதி காக்கிறது. என்ன நடந்தது என சில அதிமுக தலைமையக முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்த போது ஒரு தகவல் கிடைத்தது. அதாவது எக்காரணத்தைக் கொண்டும் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொதுவெளியில் முன்னாள் அமைச்சர்களோ மாவட்ட செயலாளர்களோ பேசக் கூடாது என்பது தான். குறிப்பாக விஜய் குறித்து தமிழக வெற்றி கழகம் குறித்தோ எந்த காரணத்தை கொண்டும் பொதுவெளியில் பேசக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளாராம்.

அதிமுக கூட்டணி: மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஆகியவற்றிலும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் மீண்டும் இதனை அழுத்தி கூறி இருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகமே திரும்பிப் பார்க்கும் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். கூட்டணிக்கு தயார் என விஜய்யும் பச்சை கொடி காட்டி இருக்கிறார். பாஜகவும் திமுகவும் தான் கொள்கை எதிரிகள் என விஜய் வெளிப்படையாக மாநாட்டிலேயே அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: தற்போது பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயை வெகுவாக புகழ்ந்து பேசி வருகின்றனர். இதனால் நிச்சயம் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் தமிழக வெற்றிக் கழ்கமும் கூட்டணி அமைக்கும். இன்னும் சில மாதங்களில் கூட்டணி பேரமும் தொடங்கும் என்கின்றனர். துணை முதலமைச்சர் பதவி, மூன்றில் ஒரு பங்கு சீட் என விஜய் கேட்கிறார் என ஏற்கனவே தகவல் உலா வந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்னும் சில மாதங்களில் அதிமுக தவெக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் எனவும் சொல்கின்றனர்.

பிரசாந்த் கிஷோர்: ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் ஆய்வு நடத்தி சில அறிவுரைகளை விஜய் தரப்புக்கு வழங்கி இருக்கிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியும் பலமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் விஜய்க்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். எனவே, விஜய் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என சொல்லியதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் தான் கூட்டணி என விஜய் கூறியிருந்த நிலையில் அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+