வாக்குச்சாவடிகளில் சிசிடிவிகளை குறைக்கிறாங்க.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்பதுரை அவசர மனு
சென்னை: அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான சிசிடிவிகள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமராக்களை குறைக்கக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை அவசர மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை அவசர மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குபதிவை கண்காணிக்கும் வகையில் cctv கேமரா பொருத்தப்படுகிறது.
சில மாவட்டங்களில் இந்த cctv கேமராக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சி நடப்பதாக தெரிகிறது. இதன் மூலம் வாக்குசாவடி கைப்பற்றல் கள்ள ஓட்டு போடுதல் உள்ளிட்ட தவறுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட்டு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் குறையாத வண்ணம் அதிரடி ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான சிசிடிவிகள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications