சென்னையின் இந்த 5 மண்டலங்களில்.. காற்றுத்தர குறியீடு மிக மோசம்.. ஷாக் கொடுக்கும் புள்ளி விவரம்!
சென்னை: தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
Recommended Video
இதனால் சென்னை முழு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன்காரணமாக சென்னையில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் காற்று மாசுபாடு 55 முதல் 75 குறியீடு என்ற அளவிலேயே இருந்த நிலையில் பட்டாசு வெடித்ததால் 150 என உயர்ந்துள்ளது.

இந்த் நிலையில் சென்னையின் ஐந்து மண்டலங்களிலும் காற்றுத் தர குறியீடு மிக மோசமான நிலையில் இருக்கிறது என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை:
பெசன்ட் நகரில் தீபாவளிக்கு முன்பு (26.11.2021) காற்றுத் தரக் குறியீடு 41ஆக இருந்தது. ஆனால், தீபாவளி தினத்தன்று இது 342 ஆக உயர்ந்தது. தியாகராய நகரில் காற்றுத் தர குறியீடு 56-ல் இருந்து 385 ஆக உயர்ந்திருக்கிறது. நுங்கம்பாக்கத்தில் 51ல-ல் இருந்து 369 ஆக அதிகரித்துள்ளது. திருவல்லிக்கேணியில் 52-ல் இருந்து 368 ஆக அதிகரித்துள்ளது. சௌகார்பேட்டையில் 60-ல் இருந்து 371 ஆக குறியீடுகள் உயர்ந்துள்ளன.
இந்த ஆண்டில் மிதக்கும் நுண்துகள்களின் அளவுதான் வெகுவாக அதிகரித்துள்ளது. காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடின் அளவில் பெரிய மாறுபாடு ஏதுமில்லை.இ.ந்த ஆண்டு சென்னையில் காற்றின் தரம் மிக மோசமாக இருந்ததற்கு காற்றின் வேகம் குறைவாக இருந்ததும் அதிக ஈரப்பதம் இருந்ததுமே காரணம். இதன் காரணமாகத்தான் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்ட புகையும் நுண்துகள்களும் விரைவில் படியாமல் வெகு நேரம் காற்றில் மிதந்ததன என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications