சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ், இன்று மேற்கொண்ட அதிரடிப் பிரச்சாரம் தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவருக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவளித்திருக்கின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில், விஜய் களமிறங்கியிருக்கிறார். தொடக்கத்தில் அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று பேசப்பட்ட நிலையில், கூட்டணி ஏதும் இல்லாமல் கட்சி தனித்து களம் காண்கிறது.

இந்நிலையில், விஜய் ரசிகர்களின் ஆதரவு தவெகவுக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மறுபுறம், அஜித் ரசிகர்களின் ஆதரவு யாருக்கு? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில், அஜித் ரசிகர்கள் சிலர் அதிமுகவுக்கு ஆதரவளித்திருக்கின்றனர்.
ஆர்.கே.நகரில் என்ன நடந்தது?
சென்னை ஆர்.கே.நகர் 43-வது மத்திய வட்டத்திற்கு உட்பட்ட தண்டையார் நகர் பகுதியில், அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு இஸ்திரி கடைக்குச் சென்ற அவர், சட்டை ஒன்றை வாங்கித் தானே இஸ்திரி செய்து ஆதரவு திரட்டினார்.
பிரச்சாரத்தின் முக்கிய நிகழ்வாக, ஒய்.எம்.சி.ஏ குப்பம் பகுதியில் வேட்பாளர் சென்றபோது, நடிகர் அஜீத் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அஜித் ரசிகர்கள்
ரசிகர்கள், நடிகர் அஜீத்தின் திருவுருவப் படத்தை அவருக்கு வழங்கித் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். இளைஞர்களின் இந்த எழுச்சி அ.தி.மு.க தரப்பிற்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் பிரச்சாரத்தின் போது பகுதி செயலாளர் சந்தனசிவா, வட்ட கழக செயலாளர் மக்கள் கே.மகேந்திரன், லிங்கேசன், கே.லோகு, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அஜித் ரசிகர்களின் ஆதரவு யாருக்கு?
சில இடங்களில் அஜித் ரசிகர்கள் குறிப்பிட்ட கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், அஜித் தனக்கு என ரசிகர் மன்றம் எதையும் வைத்திருக்கவில்லை. எனவே, ஆதரவு தெரிவிப்பது உண்மையான ரசிகர்களா? என்பதும் உறுதிப்படுத்த முடியவில்லை. நேற்றைய பிரச்சாரத்தில், விஜய்க்கு அஜித் புகைப்படத்தை சிலர் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications