திருச்சி, சென்னை மக்களுக்கு குஷியான செய்தி.. வருகிறது புதிய விமான சேவைகள்.. சேலத்திற்கு ஜாக்பாட்
சென்னை: அலையன்ஸ் ஏர் சென்னை-திருச்சி & கொச்சி-திருச்சியை விரைவில் தொடங்க உள்ளது. முன்பதிவுகள் விரைவில் திறக்கப்படும். திருச்சியில் இருந்து அதிகமான உள்நாட்டு விமானங்கள் புதிய முனையத்துடன் கூடிய விரைவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் திருச்சிக்கு விமான சேவைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. இது போக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-சேலம் இடையே விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ், அலையன்ஸ் ஏர்லைன்ஸ் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

ட்ரூஜெட் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு வரை சென்னை மற்றும் சேலம் இடையே விமானங்களை இயக்கி வந்தது. இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காலத்தில், விமான சேவை நிறுத்தப்பட்டது, அதன் பிறகு, எந்த சேவையும் இல்லை.
இப்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் சென்னையில் இருந்து சேலத்திற்கு சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது, முதல் விமானம் ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும். தினமும் காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.30 மணிக்கு சேலம் சென்றடையும்.
பின்னர் சேலத்தில் இருந்து மதியம் 12.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விமானம் 1.45 மணிக்கு இங்கு தரையிறங்கும். டிக்கெட் முன்பதிவுகளின் அடிப்படையில் நாளொன்றுக்கான சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும், டிக்கெட் விலை 2,390 ரூபாயிலிருந்து தொடங்கும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
சென்னை விமானம்: ஏற்கனவே பீக் ஹவர்ஸில் அதிக உள்நாட்டு விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இது தொடர்பாக அறிக்கையின்படி, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) உள்நாட்டு விமானங்களுக்கு சேவை செய்வதற்காக பழைய சர்வதேச புறப்பாடு முனையம் (T4) மற்றும் தரை தளத்தில் பயன்படுத்தப்படாத வருகை முனையத்தை மாற்ற திட்டமிட்டுள்ளது.
2013 முதல் காலியாக உள்ள பழைய முனையத்தின் பயன்படுத்தப்படாத தரை தளம், உள்நாட்டு பயணிகளை கையாளும் வகையில் மாற்றப்படும். பாதுகாப்பு ஆய்வுக்குப் பிறகு தேவையான மாற்றங்கள் மற்றும் வசதிகள் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சேலம்: இந்த நிலையில்தான் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-சேலம் இடையே விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. சமீபத்தில்தான் சேலம் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனாவிற்கு பின் மீண்டும் சேவை தொடங்கப்பட்டது.
இண்டிகோ மற்றும் அலையன்ஸ் ஏர் ஆகியவை சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சிக்கு விமானங்களை இயக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சென்னைக்கு தற்போது சேவை தொடங்கி உள்ளது.
உடான் 1 திட்டத்தின் கீழ் 2018 மார்ச் 25 முதல் சேலம்-சென்னை இடையே தனியார் கேரியர் மூலம் இயக்கப்பட்ட தனி விமான சேவை கடந்த ஜூன் 2, 2021 ல் இருந்து நிறுத்தப்பட்டது. அதில் இருந்து சேலம் விமான நிலையம் செயல்படாமல் இருந்தது. இங்கே முதல் விமான சேவை உடானின் கீழ் இயக்கப்பட்டது. 1 கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நிறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் மீண்டும் உடான் 5.0 திட்டத்தின் கீழ் சேலம் பட்டியலிடப்பட்டது. சேலம் விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்க பல விமான நிறுவனங்களை ஈர்க்கும் பணியை AAI மேற்கொண்டது. உடானின் கீழ் சேலம் மற்றும் சென்னை இடையே விமான சேவை இயக்க பல்வேறு நிறுவனங்களும் முன் வந்தன. இந்த நிலையில்தான் தற்போது சென்னை சேலம் விமானம் இயக்கப்பட்டு உள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications