Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல்.. பேனர்கள் கிழிப்பு..ராயப்பேட்டையில் 144 உத்தரவு அமல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ராயப்பேட்டையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    AIADMK பொதுக்குழுக்கூட்டம் | ரத்தக்களறியான ராயப்பேட்டை | EPS VS OPS

    அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கிய நிலையில், சென்னை உயா் நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
    இந்த நிலையில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு 9.15 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இறுதியாக உயர் நீதிமன்றத்தை நம்பி இருந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு, நீதிமன்ற தீர்ப்பும் சாதகமாக அமையவில்லை.

    Amid a clash between OPS-EPS supporters at the head office, Order 144 has been enforced in royapettah

    இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டார். ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகம் வருகிறார் என்பதை கேள்விப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், அங்கு சரிசமமாக குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவிய நிலையில் கற்கள் கட்டைகள் உள்ளிட்டவற்றால் மாறி மாறி இருதரப்பு ஆதரவாளர்களும் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதால் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர் ஒருவருக்கு மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அடுத்ததாக கலவரங்களுக்கு மத்தியிலும் ஜெயலலிதா எம்ஜிஆர் சிலைகளுக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜெயலலிதா நின்ற பால்கனியில் உற்சாகமாக தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அதே நேரத்தில் ஆத்திரம் அடங்காத ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்களை கிழித்து அதிமுக அலுவலகத்திற்கு உள்ளே வைத்து தீவைத்துக் கொளுத்தினர்.

    இதனால் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியே கலவரக் களமாக பார்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீஸார், மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் சிறிது நேரத்திற்குள் சூழல், காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இருந்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகம் வந்த நிலையில், இபிஎஸ் ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுக அலுவலகம் வருவதாக தகவல் வெளியாகியது. இதனால் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர, காவல் துறையினர் ராயப்பேட்டையில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+