3 மணி நேர பயணத்திற்கு கூட.. பிரைவேட் ஜெட்டை பயன்படுத்தும் விஜய்.. பரந்தூரை எதிர்க்கிறாரா? குழப்புதே!
சென்னை: தொடர்ந்து தனது பயணங்களுக்கு சொகுசு விமானமான பிரைவேட் ஜெட்டை பயன்படுத்தும் நடிகர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு மட்டும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு பல்வேறு வல்லுனர்கள் குழு தொடங்கி அரசின் பல பிரிவுகள் வரை அறிவியல்பூர்வமான அனுமதி வழங்கி உள்ள நிலையில் நடிகர் விஜயும் அவரின் தமிழக வெற்றிக் கழகமும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில்தான் நடிகர் விஜய்யின் தனி விமானம் கவனம்பெற்றுள்ளது . அவர் நேற்று திருச்சியில் நடந்த பயணத்திற்கு சென்னையில் இருந்து பிரைவேட் ஜெட்டில் சென்றார். 3 மணி நேரத்தில் அவர் பிரைவேட் ஜெட்டில் சென்றார். சென்னை டூ திருச்சி செல்ல சாலை வழியே நல்ல மார்க்கம் உள்ளது. அதேபோல் நிறைய விமானங்கள் உள்ளன. ஆனால் இதற்கு கூட அவர் பிரைவேட் ஜெட்டை பயன்படுத்தி உள்ளார்.
விஜய் எந்த ஜெட் விமானத்தை வைத்திருக்கிறார்?
பரந்தூர் விமான நிலையமே சென்னை ஏர்போர்ட்டில் போதிய வசதி இல்லை, டிராபிக் அதிகம் உள்ளது. சென்னையை பெங்களூர், ஹைதராபாத் முந்திவிட்டது என்பதால்தான். அதை எதிர்க்கும் விஜய் தனது தனிப்பட்ட வசதிக்காக மட்டும் பிரைவேட் ஜெட்டை பயன்படுத்துகிறார். பொதுமக்களும் இப்படி பயன்படுத்த முடிந்தால் பரந்தூர் அவர் சொல்வது போல் அவசியமாக இருக்காது. ஆனால் பொதுமக்களால் அப்படி செய்ய முடியாது. அப்படி இருக்க விஜயின் பரந்தூர் எதிர்ப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
நடிகர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வந்ததில்லை என்றாலும், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல அறிக்கைகள் விஜய் ஹாக்கர் 800XP என்ற நடுத்தர ஜெட் விமானத்தை வைத்திருப்பதாகக் கூறுகின்றன. இந்த விமானம் பெரும்பாலும் அவர் திரைப்பட படப்பிடிப்புகள், அரசியல் பயணங்கள் மற்றும் இந்தியாவிற்குள் மேற்கொள்ளும் பயணங்களின்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் காணப்படும்.
விஜய்யின் தனி விமானத்தின் விலை என்ன?
ஹாக்கர் 800XP விமானத்தின் விலை சுமார் ₹80-100 கோடி (தோராயமாக $10-12 மில்லியன்). ஆனால் இதே விலை விமானத்தின் உட்புற அலங்காரங்கள், விமான மின்னணுவியல் மாற்றங்கள் மற்றும் பராமரிப்பை பொறுத்து மாறுபடும். இந்தியாவில், இறக்குமதி வரிகள் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் காரணமாக செலவு மேலும் அதிகரிக்கிறது. இதனால் இவரின் விமானம் 150 கோடி ரூபாய் வரை இருக்கலாம். அதோடு வருடத்திற்கு இதன் பராமரிப்பு , விமானி, பணிப்பெண், ஹேங்கர் கட்டணம் என்று இவர் 10-15 கோடி செலுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதுவும் குறைந்தபட்ச தொகைதான்.
விஜய் ஆரம்பத்தில் குத்தகை மாதிரியின் மூலம் விமானத்தைப் பெற்றதாகவும், பின்னர் அதை முழுவதுமாக வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிகபட்சம் 10-15 கோடிகளை அவர் சேமித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஹாக்கர் 800XP பற்றிய விவரங்கள்
உற்பத்தியாளர்: ஹாக்கர் பீச்ச்கிராஃப்ட்
தொலைவு: ~4,500 கி.மீ (சென்னை டூ துபாய் வரை இடைநில்லாமல் பறக்கலாம்)
அதிகபட்ச வேகம்: 830 கி.மீ/மணி
உட்காரும் திறன்: 8-13 பயணிகள்
உள்ளே இருக்கும் வசதிகள்: சொகுசு சாய்வு நாற்காலிகள், கான்ஃபரன்ஸ் டேபிள், பொழுதுபோக்கு அமைப்பு, மினி பார், செயற்கைக்கோள் தொலைபேசி
பணியாளர்கள்: 2 விமானிகள் + 1 பணிப்பெண் (கட்டாயம்)
ஹாக்கர் 800XP விமானத்தின் கேபின் நடுத்தர அளவிலான ஜெட் விமானத்திற்கு ஏற்ற விசாலமான மற்றும் வசதியான கேபின் ஆகும் .
விஜய் எப்போது, ஏன் இதைப் பயன்படுத்துகிறார்?
விஜய் அடிக்கடி கேரளா, ஹைதராபாத் மற்றும் துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச இடங்களுக்கு பயணம் செய்கிறார். அப்போதெல்லாம் இதை பயன்படுத்துவார். அரசியல் கூட்டங்களுக்கு செல்லும் போதும் இதை பயன்படுத்துவார். தனிப்பட்ட ஆன்மீக பயணங்களின்போதும் இந்த விமானம் பயன்படுத்தப்படுகிறது.
விஜய் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களைப் போலவே, அவர் தனி விமானத்தைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசியதில்லை. அதை பற்றி தொடர்ந்து ரகசியம் காத்து இருக்கிறார். ஆனால் பல திரைப்படத் துறை சார்ந்தவர்கள் அவர் பல நிகழ்வுகளுக்காக அந்த தனி விமானத்தைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications