இறங்கி வராத ராமதாஸ்.. அமித் ஷாவின் சென்னை பயணம் கடைசி நேரத்தில் ரத்து.. இதுதான் காரணம்?
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித்ஷாவின் வருகை ரத்தானதற்கு பாஜக தேசிய தலைவர் நியமனம் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், தமிழ்நாட்டில் முக்கிய கட்சியான பாமக கூட்டணிக்கு இன்னும் வராததே காரணமாக தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் தொடங்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கினார். சென்னை வந்த அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இதன்பின் கடந்த மாதம் மதுரை வந்த அமித்ஷா, தென் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் அமித்ஷா
அப்போதே இனி அமித்ஷாவின் தமிழக பயணம் தொடர்ச்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கேற்ப ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மீண்டும் அமித்ஷா சென்னை வரவிருப்பதாக தகவல் வெளியாகியது. இதனை கமலாலய வட்டாரங்களும் உறுதி செய்திருந்தன. ஆனால் தற்போது கடைசி நேரத்தின் அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேசிய தலைமை
பாஜக தேசிய தலைவர் நியமன விவகாரம் தொடர்பாக அமித்ஷா தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே ஜேபி நட்டாவின் பதவிக் காலம் முடிவடைந்து 6 மாதத்தை கடந்துவிட்டதால், இம்மாத இறுதிக்குள் பாஜக தேசிய தலைமையை நியமனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இம்முறை முதல்முறையாக பெண் தலைமையை கொண்டு வர பாஜக முடிவு செய்திருக்கிறது.
டெல்லியில் அன்புமணி
இதன் காரணமாகவே அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவை இணைப்பதற்காகவே இம்முறை அமித்ஷா வருவதாக இருந்தது. அதற்கேற்பவே பாமக தலைவர் அன்புமணி திடீரென டெல்லி பயணித்து சில சந்திப்புகளை நடத்தி இருந்தார்.
ராமதாஸ் - அன்புமணி மோதல்
ஆனால் ராமதாஸ் - அன்புமணி இடையிலான பிரச்சனை முடிவுக்கு வராததால், அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமித்ஷாவின் நெருக்கமாக இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக 2 முறை ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் பாஜக ஆலோசனை நடத்தி இருந்தது.
அடுத்த பயணம்?
ஆனாலும் இதுவரை அன்புமணி - ராமதாஸ் இடையிலான மோதல் முடிவுக்கு வந்தபாடில்லை. இதனால் இவர்களின் இருவரின் மோதல் முடிவுக்கு வந்தபின் அமித்ஷாவின் வருகை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அமித்ஷா சென்னை வரும் போது அதிமுக - பாஜகவில் இணையும் கூட்டணி கட்சிகள் குறித்த முழு விவரமும் தெரிய வரும் என்று நம்பப்படுகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications