சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2வது கட்டம்.. கோவை-அவிநாசி சாலை உட்பட பல திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல்

Google Oneindia Tamil News

சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2வது கட்டம்.. கோவை-அவிநாசி சாலை உட்பட பல திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் இருந்தபடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக, மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நினைவு பரிசு வழங்கினர். முதல்வர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர்.

Amit Shah dedicated many projects to the people of Tamilnadu

இதன்பிறகு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அமித் ஷா அர்ப்பணித்தார். இதோ பாருங்கள்:

* திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

* ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார்

* கோவை - அவினாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத்திட்டத்திற்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார்

* கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார்

* சென்னை வர்த்தக மையம் ரூ.309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார்

* வல்லூரில் ரூ.900 கோடியில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலிய முனையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்

* அமுல்லைவாயிலில் ரூ.1400 கோடியில் Lube Plant அமைக்கும் திட்டத்திற்கும் அடிக்கல்

* கரூர் மாவட்டத்தில் காவேரியில் ரூ.406 கோடி திட்ட மதிப்பில் புதிய கதவணை கட்டும் திட்டத்திற்கு அடிக்கல்

English summary
Union Home Minister Amit Shah dedicated many projects to the people of Tamilnadu and laid the foundation for some projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X