அண்ணாச்சி இது தமிழ்நாடு! வேஸ்ட்டாய் போன அமித்ஷா வியூகம்..எடுபடாத எடப்பாடி கணக்கு! சோகத்தில் என்டிஏ
சென்னை: இதுவரை வெற்றியே பெறாத ஒடிசாவில் வெற்றி, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி ஆட்சி தென் மாநிலங்கள் வரை அமித்ஷாவின் செல்வாக்கு அதிகரித்தாலும், தமிழ்நாட்டில் அமித்ஷாவின் வியூகங்கள் எதுவுமே கை கொடுக்கவில்லை. கேரளாவில் கூட சுரேஷ் கோபியின் மூலம் பாஜக கணக்கை தொடங்கியிருந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அமித்ஷா வகுத்த வியூகங்கள் இதுவரை எடுபடவில்லை. மெகா கூட்டணி அமைக்கப்படும் என கூறினாலும் இதுவரை சிறிய கட்சிகள் கூட கதவை தட்டாதது என்.டி.ஏ. கூட்டணியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக அரசியல் களம் சற்றே சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. 2026 தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் கூட்டணியை இறுதி செய்ய கட்சித் தலைவர்கள் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகின்றனர்.
திமுக கூட்டணி ஏற்கனவே பலம் வாய்ந்ததாக இருக்கிறது. பெரும்பாலான கட்சிகள் அதே கூட்டணியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் அதிக சீட்டுகள் வேண்டுமென காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றன.

அமித்ஷா
ஆனால் அது கூட்டணியில் பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தாது எனச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக ஆளும்கட்சியாக வேண்டும் எனத் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணியை அமித்ஷா இறுதி செய்துவிட்டார். 2021ஐ போலவே 2026லும் பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கிறது. மேலும் அந்த தேர்தலில் கூட்டணியிலிருந்து பாமகவை அழைத்து வர எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாகப் பேசி வருகிறார்.
என்.டி.ஏ கூட்டணி
இந்நிலையில், தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி அமைந்தது இன்று 200 நாட்கள் கடந்துவிட்டது. ஆனால், இன்று வரை கூட்டணியில் பெரிய கட்சிகள் என்று அழைக்கப்படுவது அதிமுகவும் பாஜகவும் மட்டுமே. "மெகா கூட்டணி" என்று அமித் ஷா அறிவித்த திட்டம் இன்னும் காகிதத்திலேயே உள்ளது. பாமக, தேமுதிக, அமமுக போன்ற கட்சிகள் கூட்டணிக்குள் வந்து நிலைக்காமல் விட்டு விலகி தனித்த பாதையைத் தேடி செல்கின்றன. செங்கோட்டையனை திடீரென பாஜகவுக்கு இழுத்துச் சென்றது முதல், ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன் வாய்வாதம், டிடிவி தினகரன் திடீர் அதிருப்தி, பாமக குடும்ப அரசியல் என பல பிரச்சினைகள் எழுந்துள்ளது.
தமிழக அரசியல்
இப்படி கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையே சமாளிக்க முடியாத நிலையில், பீகாரில் அமித் ஷா செயல்படுத்திய 'சோஷியல் என்ஜினியரிங்' திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை அவரே புரிந்து கொண்டிருப்பார். வடஇந்திய மாநிலங்களில் சமூக வாக்கு சமன்பாட்டை பாஜக பொறுத்துக் கொண்டு வெற்றியைப் பெற்று வந்துள்ளது. பீகார் தேர்தலில் சிராக் பஸ்வானை கூட்டணிக்குள் இழுத்து, யாதவ்-முஸ்லீம் வாக்கு எதிராக மற்ற சமூகங்களை ஒருங்கிணைத்த தந்திரம் வெற்றி பெற்றது.
எடப்பாடி
ஆந்திராவிலும் பவன் கல்யாண் மூலம், சந்திரபாபு நாயுடுவை மீண்டும் அருகில் கொண்டு வந்தது வெற்றியை தந்தது. ஆனால் தமிழகத்தில் இந்த முறை அமித்ஷா நினைத்தது நடக்கவில்லை. காரணம் - பாஜகவுக்கு இன்னும் பொதுமக்கள் மத்தியில் உறுதியான நம்பிக்கை உருவாகவில்லை. 2021 தேர்தலில் டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வர அமித் ஷா முயன்றபோதும், எடப்பாடியின் மறுப்பு அதைக் கட்டுப்படுத்தியது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனியாகப் போட்டியிடும் நிலை உருவாக, அண்ணாமலையின் தாக்கம், எடப்பாடியின் அதிருப்தி, கூட்டணி சர்ச்சை என அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தன.
மெகா கூட்டணி
கரூர் சம்பவத்துக்குப் பிறகு நடிகர் விஜய்யை அணுகி பார்த்ததும் பலனளிக்கவில்லை. பொதுக்குழுவில் நேரடியாக "நான் முதலமைச்சர் வேட்பாளர்" என்று அறிவித்த விஜய், என்.டி.ஏ கூட்டணி பேச்சுக்கு ஃபுல் ஸ்டாப் போட்டுவிட்டார். டிடிவியும் வெளிப்படையாக விஜய்யை ஆதரிக்கத் தொடங்கியதால், பாஜக-அதிமுக கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் புதிய சவால் எழுந்துள்ளது. மேலுமாக பாமக இல்லாமல் வட மாவட்டங்களில் வன்னியர் வாக்கும், ஓபிஎஸ் - டிடிவி - சசிகலா இல்லாமல் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கும் என்.டி.ஏவுக்கு எளிதாக கிடைக்காது என்ற நிலை தொடர்கிறது.
விஜய் டிவிகே
பாமக, தேமுதிக, ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி என யாருமே இன்னும் என்.டி.ஏவுக்கு வெளிப்படையாக ஆதரவாக பேசாதது பாஜக தலைமைக்கு தலைவலியாக மாறியுள்ளது. மொத்தத்தில், மெகா கூட்டணி அமையாமல், இருக்கிற கூட்டணியும் வலுவாகமல், புதிய கட்சிளும் கைகொடுக்காமல் என்.டி.ஏ மிகுந்த குழப்பத்தில்தான் இருக்கிறது. இதற்கிடையில் விஜய் எழுப்பும் அலை, அதிமுக-பாஜக முகாமுக்கு கூடுதல் சிக்கலை உருவாக்கி வருவதும் பாஜகவுக்கு தலைவலியை அதிகப்படுத்தியுள்ளது என்கின்றனர்.
-
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications