சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம் வரும் அமித்ஷாவிற்கு தயாராகும் விருந்து... மெனு என்ன தெரியுமா?

தமிழகம் வரப்போகிறார் அமித்ஷா. அவரது வருகை பாஜகவினருக்கு மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது. அமித்ஷாவிற்கு வெயிட்டாக விருந்து தரப்போகிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் சாணக்கியர் என்று பாஜகவினரால் வர்ணிக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரப்போகிறார். அவரது வருகை பாஜகவினருக்கு அதீத சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பற்றியும் முடிவு செய்யப்போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் அமித்ஷாவிற்கு வெயிட்டாக விருந்து கொடுக்கப் போகிறாராம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றாலும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். பாஜகவினர் இரண்டு பேர் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளனர். அடுத்ததாக பாஜகவின் பார்வை 2021 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பியுள்ள அமித்ஷா விரைவில் தமிழ்நாட்டிற்கு வரப்போகிறார். இங்கு வந்து அவர் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்கட்சியினர் கேட்கலாம். அமித்ஷாவின் வருகைக்கும் அதிமுகவிற்கும் சம்பந்தம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னாலும் ஒருவித எதிர்பார்ப்பு எல்லோருக்கும் எழுந்துள்ளது.

கூட்டணி வைத்து போட்டியிட்டால் கூட ஆன்டி இந்தியனா?.. அமித் ஷா விமர்சனம்.. காஷ்மீர் தலைவர்கள் பதிலடிகூட்டணி வைத்து போட்டியிட்டால் கூட ஆன்டி இந்தியனா?.. அமித் ஷா விமர்சனம்.. காஷ்மீர் தலைவர்கள் பதிலடி

கூட்டணி முடிவு

கூட்டணி முடிவு

சட்டசபை தேர்தலுக்கு சரியாக ஆறு மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போது இருந்து தேர்தல் வேலையை ஆரம்பித்தால்தான் ஒரு சில இடங்களிலாவது தாமரையை மலர வைக்க முடியும் என்று நினைக்கின்றனர் பாஜகவினர். அதற்காக முதலில் கையில் எடுத்ததுதான் வெற்றிவேல் யாத்திரை. அமித்ஷாவும் சூட்டோடு சூடாக வந்து கூட்டணி பேசி முடித்து விட்டால் தொகுதிகளும் உறுதியாகிவிடும் என்று நினைக்கின்றனர் பாஜகவினர்.

எந்தெந்த தொகுதி

எந்தெந்த தொகுதி

பாஜக இந்த முறை இரட்டை இலக்கத்தில் ஜெயித்து சட்டசபைக்கு நுழைய வேண்டும் என்று நினைக்கிறது. தனக்கு சாதகமாக உள்ள தொகுதிகள், அறிமுகமான வேட்பாளர்களை களமிறக்க நினைக்கிறது. இப்போதே வேட்பாளர்கள், தொகுதிகளை உறுதி செய்து விட்டால் களப்பணியை தொடங்கி விடலாம் என்று நினைக்கின்றனர் பாஜகவினர். அமித்ஷாவும் தொகுதி பங்கீடு பற்றி பேசி உறுதி செய்து விடுவார் என்று பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெவி விருந்து

ஹெவி விருந்து

தமிழகம் வரும் உள்துறை அமைச்சருக்கு ஹெவி விருந்து தரப்போகிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சப்பாத்தி, தால் மசாலா, பெப்பர் பாயா, மட்டன் கோலா உருண்டை குழம்பு, செட்டிநாடு மீன் வருவல் போன்றவை இடம் பெற வேண்டும் என்று மெனு கொடுத்திருக்கிறாராம் முதல்வர் பழனிச்சாமி.

விருந்தில் யார் யார்

விருந்தில் யார் யார்

மத்திய அமைச்சருக்கு தரும் மதிய விருந்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்களும் பங்கேற்க உள்ளதாகவும், விருந்தோடு கூட்டணியும் பேசி இறுதி செய்யவும் முடிவு செய்திருக்கிறார்களாம். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் தமிழக அரசியல் களம் அனலடிக்க ஆரம்பித்து விடும்.

English summary
Union Home Minister Amit Shah is coming to Tamil Nadu. His visit has made the BJP extremely happy. As the assembly elections approach, it has been reported that the coalition is going to negotiate and decide on the distribution of constituencies. Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy is going to give a banquet to Amit Shah who is coming to Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X