துச்சாதனன் துரைமுருகன்! தெலுங்கு பட வில்லன் பொன்முடி! திமுக அமைச்சர்களை பொளந்து கட்டிய தினகரன்!
சென்னை: தமிழகத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள் அந்த பதவிக்குரிய மாண்பை கடைபிடிப்பதில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகனை துச்சாதனன் என்றும் அமைச்சர் பொன்முடியை தெலுங்க பட வில்லன் எனவும் கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் டிடிவி தினகரன்.
மேலும், துரைமுருகன் பேசும் பேச்சையெல்லாம் தன்னால் சகிக்க முடியவில்லை என்றும் அவருக்கு ஜமீன்தார் என்று நினைப்பு போல் எனவும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

துரைமுருகன்
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர்களை ஒரு பிடி பிடித்தார். 80 வயதை கடந்த அமைச்சர் துரைமுருகன் என்னா பேச்சு பேசுகிறார் என்றும் அவர் வயதுக்கும் வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல எனவும் கூறினார். ஒரு மருத்துவரிடம் எப்படி பேச வேண்டும் என்று கூடத் தெரியாமல் கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க என ஊடகங்கள் முன்னிலையிலேயே அவர் பேசியது ஏற்கத்தக்கதல்ல என தினகரன் சாடினார்.

ஓசி வீடு -ஓசி கார்
காட்பாடி தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அமைச்சர் துரைமுருகனை எந்த ஊருக்கு தூக்கி அடிப்பது என வினவிய டிடிவி தினகரன் அடுத்ததாக அமைச்சர் பொன்முடி மீதும் பாய்ந்தார். அமைச்சர் பொன்முடி பேராசிரியராக இருந்தவர் படித்தவர் என்று பார்த்தால் அவர் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் தெலுங்கு பட வில்லன்களை போல் இருப்பதாக கிண்டல் அடித்தார் டிடிவி தினகரன். ஓசி வீட்டில் இருந்துக் கொண்டு,ஓசி காரில் பயணித்துக் கொண்டு, எஜமானர்களாகிய மக்களை ஓசியில் போகிறீர்கள் என பொன்முடி எப்படி கூறலாம் என வினவினார்.

ராஜகண்ணப்பன்
இதையெல்லாம் விட பெரிய கொடுமை அமைச்சர் ராஜகண்ணப்பன் என்று கூறிய டிடிவி தினகரன், ஜாதியை சொல்லி அவர் அதிகாரியை திட்டியதை எங்கு சென்று சொல்வது என வேதனைப்பட்டார் டிடிவி தினகரன். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை பொறுத்தவரை அடுல்ட்ஸ் ராஜா என சாடியிருக்கிறார் டிடிவி தினகரன். தாம் பள்ளிக்கூடம் செல்லும் போது இருந்து துரைமுருகன் அமைச்சராக இருந்தும் அவரிடம் இன்னும் பக்குவம் இல்லை எனக் கூறிய டிடிவி தினகரன், அவரை துச்சாதனன் என விமர்சித்தார்.

டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியை பற்றி பொளந்துகட்டுவார் என்று பார்த்தால் திமுக அமைச்சர்களை ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பொளந்து கட்டியிருக்கிறார் டிடிவி தினகரன். திமுக மீதான இவரது திடீர் பாய்ச்சலின் பின்னணியில் பாஜக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications