அமமுக 4.. ஓபிஎஸ் 4.. பாஜக எடுத்த முடிவு.. நட்சத்திர ஹோட்டலில் ஓகே ஆன "டீல்".. அதிமுகவிற்கு செக்
சென்னை: பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஓ பன்னீர்செல்வம் முன்னுரிமை: 6 இடங்களை அவர் கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு வர எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் பாஜக திரும்ப தொடங்கி உள்ளதாம். எடப்பாடி இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவிற்கு பிரஷர் கொடுக்க டெல்லி முடிவு செய்துள்ளதாம். விரைவில் மோடி - ஓபிஎஸ் மீட்டிங் நடக்கும் என்றும் கூறுகின்றனர் பாஜகவினர்.
இந்த நிலையில்தான் நேற்று தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர்
இன்னொரு பக்கம் ஏற்கனவே அமமுக - பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இதில் அமமுகவிற்கும் 4 இடங்கள் கொடுப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க இன்று பாஜக சார்பாக கையெழுத்து போடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக வரவில்லை; அதிமுகவை பாஜக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகளை பாஜக எடுத்து வந்தது. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்று முக்கியமான "புள்ளி" ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்து கோரிக்கை விடுத்து வந்தார்.
ஆனால் எடப்பாடி பாஜகவுடன் செல்லும் முடிவை எடுக்க மாட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக வேண்டாம். தனியாகவே தேர்தலை சந்திக்கலாம் என்ற முடிவில் அவர் இருக்கிறாராம்.
இதன் காரணமாகவே அதிமுகவை கவுண்டர் செய்யும் விதமாக அமமுக, ஓபிஎஸ் ஆகியோருக்கு தலா 4 இடங்களை கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளதாம்.
பாமக கூட்டணி: இது போக பாஜக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாம். கிட்டத்தட்ட இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதில் அன்புமணி 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க.. 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கிடையாது. 5 லோக்சபா சீட் என்று பாமக கேட்டுள்ளதாம்.
இதையடுத்து பாமக இறங்கி வந்து 7 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 7 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவி பற்றி பார்க்கலாம் என்று பாஜக சொல்லி இருக்கிறதாம். இதை பாமக ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications