இப்படி ஒரு பைக்கா? ஆனந்த் மகிந்திராவை வியக்க வைத்த மாணவர்கள்.. ஓட்டி பார்த்து சொன்ன விஷயம் தான் செம
சென்னை: பிரபல தொழில் அதிபர் ஆனந்த மகிந்திரா தனது அலுவலக வளாகத்தில் சைக்கிள் போன்றே இருக்க கூடிய மடிக்கும் வகையிலான இ-பைக் ஒன்றை ஓட்டிப்பார்த்து விட்டு அது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் வியந்து பதிவிட்டுள்ளார். இந்த இ -பைக் பாம்பே ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்தது ஆகும்.
நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா.. வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில் சாம்ராஜியங்களை நடத்தி வரும் ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தலங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். குறிப்பாக தனது "எக்ஸ்" தளத்தில் தான் பார்த்து வியந்த விஷயங்களை பதிவிட்டு வருகிறார். அது மட்டும் இன்றி, தன்னம்பிக்கையூட்டும் கதைகள்.. எளிய பின்னணியில் இருந்து வந்து சாதித்த நபர்கள் குறித்த விவரங்களையும் ஆன்ந்த மகிந்திரா பதிவிட்டிருப்பதை காண முடியும்.

புதுமையான கண்டுபிடிப்புகளையும் வியக்க வைக்கும் இயற்கை காட்சிகள் உள்ளிட்டவை என சுவாரசியமான விஷயங்களை ஆனந்த் மகிந்திரா பதிவிட்டு வருகிறார். ஆனந்த் மகிந்திராவை ட்விட்டரில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கின்றனர். ஆனந்த் மகிந்திராவின் ட்விட்டிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு ஆனந்த் மகிந்திராவின் ட்விட்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவும்.
மடித்து வைக்கக்கூடிய இ-பைக்: அந்த வகையில், தற்போது ஆனந்த் மகிந்திரா போட்டுள்ள ட்வீட் ஒன்று இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. அது என்னவென்றால், மடிக்க கூடிய வகையிலான இருசக்கர வாகனம் ஒன்றை ஓட்டி பார்த்து விட்டு அதில் உள்ள அம்சங்களை வியர்ந்து பாராட்டி ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ஆனந்த மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
ஐஐடி பாம்பே மாணவர்கள் நம்மை மீண்டும் பெருமை அடைய வைத்து இருக்கிறார்கள். டைமண்ட் பிரேம் (முக்கோண வடிவம்) மற்றும் முழு சக்கர அளவுடன் கூடிய மடிக்கும் வகையிலான முதல் இ- பைக்கை கண்டுபிடுத்து இருக்கிறார். இந்த பைக் பிற மடிக்க கூடிய பைக்கை விட 35 சதவீதம் செயல் திறன் மிக்கதாக உள்ளது. அது மட்டும் இன்றி மிதமான வேகத்திலும் நிலையாக செல்கிறது.
ஐஐடி பாம்பே மாணவர்கள்: மடித்த பிறகு தூக்கி கொண்டு இந்த பைக்கை செல்ல தேவையில்லை. இந்த டிசைனில் வடிவைக்கப்பட்ட பைக் இதுவே ஆகும். எனது அலுவலக வளாகத்திற்குள் இந்த பைக்கில் பயணித்து பார்த்தேன். மாணவர்களின் ஸ்டார்ட் அப்- இல் நானே முதலீடு செய்ய இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
Hornback X1 இ பைக் தற்போது அமேசான், பிளிப் கார்ட் ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைப்பதாகவும் ஆனந்த் மகிந்திரா பதிவிட்டு இருக்கிறார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. ஐஐடி பாம்பே மாணவர்களின் கண்டுபிடிப்பை பாராட்டியும் இந்த இ பைக்கின் விலை எவ்வளவு என்பதை கேட்டும் நெட்டிசன்கள் ஆனந்த் மகிந்திராவின் பதிவுக்கு கீழே தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications