பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் இல்லை.. ஜி.கே.மணி கொடுத்த விளக்கம்
சென்னை: பாமக நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படவில்லை என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ஜூலை 8 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு அழைப்பு உள்ளது. செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம் என ஜி.கே.மணி கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக அதிகார மோதல் இருந்து வருகிறது. இருவரும் கட்சி நிர்வாகிகளை மாற்றி மாற்றி நீக்கி வருகின்றனர். குறிப்பாக கட்சியின் பொருளாளர் திலகபாமாவை பாமக நிறுவனர் ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.

இந்நிலையில், பாமகவில் புதிய நிர்வாக குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி, பொதுச் செயலாளர் முரளி சங்கர், கரூர் பாஸ்கர், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், பரந்தாமன், சிவபிரகாசம், அருள் மொழி உள்ளிட்டோர் அடங்கிய புதிய நிர்வாகக்குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி, தானே தலைவர் பொறுப்பை ஏற்பதாக ராமதாஸ் அறிவித்த நிலையில், அன்புமணியின் நிர்வாகக்குழு உறுப்பினர் பதவியையும் ராமதாஸ் பறித்துள்ளதாக தகவல் வெளியாகி பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக பரவும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி. பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படவில்லை என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
"பாமக நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் நானும் கலந்து கொண்டேன். நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்து செய்தி வெளியானது. அன்புமணியை நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கவில்லை. நிர்வாகக் குழுவின் முழுமையான பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிடவில்லை." என்றார்.
இன்று வெளியான பாமக நிறுவனரின் அறிக்கையில் செயல் தலைவர் அன்புமணி என்ற பெயர் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு, ஜூலை 8 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு அழைப்பு உள்ளது. செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம் என ஜி.கே.மணி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications