சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாலாபக்கமும் ரவுண்டு கட்டி நிற்கும் சவால்கள்.. தர்மபுரியில் தர்மசங்கடத்தில் அன்புமணி

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ

    சென்னை: எந்த முறையும் இல்லாத அளவுக்கு தருமபுரி தொகுதியில் இந்த முறை பல சிக்கலில் சிக்கி உள்ளார் அன்புமணி ராமதாஸ்!

    வன்னியர்களின் பெல்ட்டில் உள்ள தொகுதி தருமபுரி. அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் இங்கு களமிறக்கப்பட்டுள்ளார்.

    சிட்டிங் எம்பிதான்.. பழகின தொகுதிதான் என்றாலும்.. இந்த முறை சில சிக்கல்கள் பாமகவுக்கு எழுந்துள்ளது. முதல் காரணம், இதே தொகுதியில் திமுக தரப்பில் போட்டியிடுபவர் டாக்டர் செந்தில்குமார். வன்னியர்கள் நிறைந்த தொகுதி என்பதாலோ என்னவோ, திமுக வேட்பாளரும், அமமுக வேட்பாளரும் அதே சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதன்மூலம் பாமக ஓட்டு நிறையவே பிரிய வாய்ப்புள்ளது.

    வேல்முருகன்

    வேல்முருகன்

    இரண்டாவதாக, காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் பாமக மீது செம கடுப்பில் உள்ளனர். அதிருப்தியில் இருந்தால் பரவாயில்லை.. ஆனால் வேல்முருகனுக்கு ஆதரவு தர.. வேல்முருகனோ திமுகவுக்கு ஆதரவு தர.. இதன்மூலமும் பாமக ஓட்டுகள் நிறைய பிரிய சான்ஸ் உள்ளது!

    நாங்க 3 பேரும் அழைத்தோம்.. அப்படியும் அதிமுகவில் இணைய மறுத்துவிட்டார்.. ஓபிஎஸ் போட்ட குண்டு! நாங்க 3 பேரும் அழைத்தோம்.. அப்படியும் அதிமுகவில் இணைய மறுத்துவிட்டார்.. ஓபிஎஸ் போட்ட குண்டு!

    அதிமுக கூட்டணி

    அதிமுக கூட்டணி

    மூன்றாவதாக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டதாலேயே அன்புமணி வெற்றி பெற்றுவிடுவார் என்று உத்தரவாதம் தர முடியாத நிலை. இதற்கு காரணம், அதிமுகவை பொறுத்தவரை எம்பி தேர்தலை விட அடுத்ததாக தொகுதியைவிட, இடைத்தேர்தல் நடக்க உள்ள அரூர், பாப்பிரெட்டி என்ற இந்த சட்டமன்ற தேர்தலில்தான் அதிக கவனம் செலுத்துகிறது.

    அன்புமணியின் அரசியல் இப்படித்தான் ஆரம்பித்ததா? சுவாரஸ்ய தகவல்கள்

    மக்கள் நீதி மய்யம்

    மக்கள் நீதி மய்யம்

    ஆளும் தரப்பின் சப்போர்ட் தருமபுரி தொகுதிக்கு சற்று குறைவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் திமுகவுக்கு என்று ஒரு வாக்கு வங்கி அங்கு உள்ளது. அதன் கூட்டணியான விசிகவின் செல்வாக்கும் இங்கு ஓரளவு இருக்கவே செய்கிறது. இது எல்லாம் சேர்ந்துகூட அன்புமணிக்கு எதிரான வாக்குகளை பெற்று தரக்கூடும். இதற்கு நடுவில் புதிதாக கட்சி ஆரம்பித்து மக்களிடையே தனக்கென ஒரு செல்வாக்கை மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியும் மிக வேகமாக பெற்று வருவதும் பாமகவுக்கு பாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

    சர்ச்சை பேச்சுகள்

    சர்ச்சை பேச்சுகள்

    இதைதவிர இது வரை தருமபுரியில் வேலைவாய்ப்பு தரும் எந்த ஒரு தொழிற்சாலையையும் நிறுவப்படவில்லை என்பது தொகுதி மக்களின் தருமபுரி மக்களின் ஒரு கோபமாக பிரதிபலித்து வருகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுக-பாஜக கூட்டணி மீதான அதிருப்தி, விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வராதது, பாமக கூட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் சர்ச்சை பேச்சுகள்.. என மைனஸ் பாயிண்ட்கள் வரிசையில் நிற்கின்றன.

    மாங்கனி

    மாங்கனி

    இருந்தாலும் அன்புமணியை யாராலும் அசைக்க முடியாது என்பதுதான் இன்றைய தேதியின் யதார்த்தம். பெரிய அளவு இல்லாவிட்டாலும், தொகுதிக்கு அன்புமணி செய்த அடிப்படை வளர்ச்சி திட்டங்கள் ஏராளமானவை. குறை என்று சொல்ல முடியாத அளவுக்கு தொகுதியை கடந்த 5 வருடமாக கவனித்து வந்துள்ளதையும் மறுக்க முடியாது. அதனால் இடர்பாடுகளை தூக்கியெறிந்து வெற்றிக்கனியை அன்புமணி பறிப்பார் என்றே இப்போதைய நிலைமை உள்ளது.

    ஜாதீய ஓட்டுகள்

    ஜாதீய ஓட்டுகள்

    இருந்தாலும் பணவலம், ஜாதீய வாக்குகள் இவை இரண்டும்தான் எல்லாவற்றையும் தீர்மானித்து தருமபுரி தொகுதி வெற்றியை நிர்ணயிக்க போகிறது.

    English summary
    There is a tough fight between in PMK Anbumani Ramadoss and DMK Dr. Senthil Kumar in Dharmapuri Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X