சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸை நுழைய விடாமல் செய்த சின்னஞ்சிறு ஆந்திர கிராமம்.. ஒரு தொற்றுகூட இதுவரை இல்லையாம்..!

துக்கிரிலப்பாடு என்ற கிராமத்தில் தொற்று ஒன்றுகூட இல்லையாம்

Google Oneindia Tamil News

சென்னை: உலகமே கொரோனாவை பார்த்து நடுங்கி கொண்டிருக்கும் இன்றைய சூழலில், ஆந்திராவில் ஒரே ஒரு கிராமம் மட்டும் எந்தவித கவலையுமின்றி கூலாக இருக்கிறது... காரணம், சுயக்கட்டுப்பாடு மற்றும் கூட்டு முயற்சியின் மூலம் கொரோனாவை இவர்கள் அண்ட விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பீதி கவ்வி உள்ளது.. என்ன மாதிரியான வைரஸ், இதற்கான இறுதியான அறிகுறிகள் என்ன? இதற்கு என்ன மருந்துகள் என்ன என்பது குறித்தெல்லாம் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்போதைக்கு தடுப்பூசி மட்டும் நமக்கு கையில் உள்ள ஒரே நம்பிக்கை.

இந்நிலையில், எந்த மாதிரியான வைரஸ் வந்தாலும், தங்களை எதுவுமே செய்ய முடியாது என்று தைரியமாக சொல்லுகிறார்கள் ஒரு கிராமத்தினர்.. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் துக்கிரிலப்பாடு என்ற சிறிய கிராமம் உள்ளது.. இவர்கள்தான் உலகத்துக்கே ஆச்சரியத்தை தந்து வருகிறார்கள்.

கொரோனா சிகிச்சை.. ரெமிடிஸ்வர் மருந்து விரைவில் கைவிடப்பட வாய்ப்பு.. டெல்லி மூத்த மருத்துவர் தகவல் கொரோனா சிகிச்சை.. ரெமிடிஸ்வர் மருந்து விரைவில் கைவிடப்பட வாய்ப்பு.. டெல்லி மூத்த மருத்துவர் தகவல்

கொரோனாவைரஸ்

கொரோனாவைரஸ்

இந்த கிராம மக்கள் அடிக்கடி வெளியே செல்வதும் இல்லையாம், வெளியாட்களை தங்கள் கிராமத்திற்குள் நுழையவிடுவதும் இல்லையாம்.. மிக மிக அவசியமான காரியம் என்றால் மட்டுமே வெளியே செல்கிறார்கள்.. அதுவும், மாஸ்க் அணிந்துகொண்டு, கையில் சானிடைசரையும் எடுத்துக் கொண்டுதான் வெளியே கிளம்புவார்களாம்.

கூட்டம்

கூட்டம்

காரணம், பொருட்களை வாங்க இந்த கிராமத்தில் மொத்தமே 8 கடைகள்தான் இருக்கிறதாம்.. மேலும், ஒரு கடையில் குறிப்பிட்ட நாளில் ஒரு வார்டு மக்கள் மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும் என்று ரூல்ஸ் போடப்பட்டுள்ளதாம்.. தேவையில்லாமல் கடைகளில் கூட்டம் சேருவதை தவிர்க்கவே இப்படி ஒரு ஏற்பாடு செய்துள்ளனர்.

கிராமம்

கிராமம்

தொற்று வேகமாக பரவி வருகிறது என்று தெரிந்தவுடனேயே, கிராமத்தில் வழக்கமாக நடக்கும் கோயில் விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் என அனைத்தையும் தவிர்த்துள்ளனர்.. இதை கிராம மக்களே ஒன்றுகூடி எடுத்த முடிவு.. அதனால், பக்கத்து கிராமத்தில் வேறு யாருக்காவது விசேஷம் என்றால்கூட இவர்கள், அங்கு செல்வதில்லையாம்..

பாதுகாப்பு

பாதுகாப்பு

வாரத்துக்கு 2 முறை, கிராமம் முழுவதும் கிருமிநாசினி அடிக்கப்படுகிறது.. சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலும் தெளிக்கப்படுகிறது.. கிராமத்தில் உள்ள கால்வாய்கள், வடிகால்கள் 2 நாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன.. இதையெல்லாம் முறைப்படி செய்துவருவதால்தான் தங்கள் கிராமத்தில் தொற்று நுழையவில்லை என்றும், அதனாலேயே தாங்கள் முழு பாதுகாப்புடன் இருக்கிறோம் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

English summary
Andhra Pradesh Duggiralapadu Village has not reported a single coronavirus case so far
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X