நடிகர் வடிவேல், தேவாவுக்கு டாக்டர் பட்டம்.. அண்ணா பல்கலைக்கு சம்பந்தமில்லை.. துணைவேந்தர் மறுப்பு
வடிவேலு உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதற்கும் அண்ணா பல்கலைக்கும் சம்பந்தமில்லை என துணை வேந்தர் கருத்து
சென்னை: நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் மறுத்துள்ளார்.
நடிகர் வடிவேல், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு தனியார் நிறுவனம் ஒன்று டாக்டர் பட்டம் வழங்கியது போலி என சர்ச்சை எழுந்தது. அதிலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மோசடியாக பட்டம் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறுகையில் நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

விருது நிகழ்ச்சி
விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்தில் டீனிடம் தனியார் அமைப்பை சேர்ந்த ஹரீஷ் என்பவர் அனுமதி கேட்டிருந்தார். இந்த அமைப்பு பிரபலமானது இல்லை என்பதால் முதலில் டீன் அனுமதி வழங்க மறுத்துள்ளார். இதனால் முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் அளித்ததாக கூறி ஒரு கடிதத்தை டீனிடம் கொடுத்து அனுமதி பெற்றுவிட்டனர்.

ரூ 58 ஆயிரம்
இந்த விழாவை நடத்த ரூ 58 ஆயிரத்தை வங்கி மூலம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்திவிட்டனர். முன்னாள் நீதிபதி கடிதம் அளித்ததால் நிகழ்ச்சி நடத்திக் கொள்ள நாங்கள் அனுமதி அளித்தோம். ஆனால் இப்போதுதான் புரிகிறது. அந்த கையெழுத்தே ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தினுடைய இல்லாமல் போலியாக இவர்களே போட்டிருக்கலாம்.

ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம்
ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகத்திடம் போய் அண்ணா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் என சொல்லி அவரை அழைத்து வந்திருப்பர். அழைப்பிதழிலும் விழா நடைபெறும் இடம் என்ற இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரை மிகவும் பெரிய அளவில் போட்டுள்ளனர். அதும் ஞாயிற்றுக்கிழமை நேரத்தில் மாலை 3 முதல் 5 மணி வரை பல்கலைக்கழகத்தில் எந்த ஆசிரியர்களும் இல்லாத நேரத்தை அறிந்தே கச்சிதமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

காவல் துறையில் புகார்
காவல் துறையில் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இன்று மதியம் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவுள்ளோம். இதற்காக நஷ்ட ஈடு கேட்கவுள்ளோம். மேலும் இது மிகப்பெரிய கிரிமினல் குற்றம் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுப்போம். கவுரவ டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழகங்கள்தான் கொடுக்க வேண்டும். அதை தனியார் நிறுவனங்கள் கொடுக்கக் கூடாது, கொடுக்கவும் முடியாது. அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரை பார்த்ததும் விருந்தினர்கள் வந்து பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் பட்டத்தை வாங்கிக் கொண்டு போகும் போது தாம் ஏமாற்றப்பட்டோம் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இவ்வாறு துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

50 க்கும் மேற்பட்டோருக்கு டாக்டர் பட்டம்
இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், சாண்டி மாஸ்டர், ஈரோடு மகேஷ் உள்ளிட்ட சில பிரபலங்களை முன்னிறுத்தி 50-க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியான டாக்டர் பட்டங்களை அந்த அமைப்பு வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டன. சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் விருது நிகழ்ச்சி என்று நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அண்ணா பல்கலைக்கழகம் என்பதை பெரிதாக அச்சடித்திருந்தனர். அது போல் அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் மட்டுமே அச்சிடக் கூடிய அரசு முத்திரையும் இந்த அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.

நடவடிக்கை
இந்த விழாவில் டாக்டர் பட்டம் பெற வராமல் இருந்த நடிகர் வடிவேலுக்கு வீடு தேடி சென்று பொழுதுபோக்கு பிரிவில் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இந்த தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு அரசு முத்திரையுடன் கூடிய லெட்டர்பேட் எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நடிகர் வடிவேல் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்திற்கும் எங்கள் பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுப்பு தெரிவித்து துணைவேந்தர் பேட்டி அளித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications