சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை - சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

Google Oneindia Tamil News

சென்னை: அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி 'சமத்துவ நாள்' என்று கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இன்றைய தினம் அம்பத்கர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அம்பேர்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

அம்பேத்கர் 132வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க ஸ்டாலின்.

Annal Ambedkars 132nd Birthday: Leaders Honor Samathuva naal Pledge

இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து சமத்துவநாள் உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

''சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,

சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

English summary
Chief Minister Stalin announced that Ambedkar's birthday, April 14, would be celebrated as 'Equality Day'. Today, on the eve of Ambedkar's birthday, political party leaders paid floral tributes. Equality Day commitment language adopted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X