நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய பாஜக..தனித்து போட்டி என அறிவிப்பு
சென்னை : அதிமுகவுடன் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Recommended Video

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தேர்தலுக்காக வேட்புமனு துவங்கியுள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சிகளை கைப்பற்ற கடும் போட்டி அதிமுக திமுகவினரிடம் உள்ளது. ஆனால் கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை முடியாததால் வேட்பாளர் பட்டியலை வெளியிட தாமதமாகி வருகிறது.

கூட்டணி கட்சிகள் கோரிக்கை
குறிப்பாக தமிழகத்தில் உள்ள 22 மாநகராட்சிகளில் திமுக கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டி வரும் நிலையில் திமுகவும் தாங்களும் பலமுள்ள எதிர்க்கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் பெரும்பாலான மாநகராட்சி நகராட்சிகளில் கைப்பற்றி திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க அதிமுகவும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் மாநகராட்சி வார்டுகளில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெற முயன்று வருகின்றன.

மேயர் பதவி
குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவை தங்களுக்கு ஏதாவது ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளை ஒதுக்க வேண்டும் என திமுக அதிமுகவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாநகராட்சிகளில் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என திமுக அதிமுக திட்டமிட்டு பணியாற்றி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளின் இந்த திடீர் கோரிக்கை அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக கோரிக்கை
3 அல்லது 5 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை கேட்டுப் பெற வேண்டும் எனவும், 138 மாநகராட்சிகளில் குறைந்தது 20 நகராட்சிகளையும் கேட்டுப் பெற வேண்டும் எனவும், இதுகுறித்து அதிமுகவுடன் பேச்சு நடத்தி உரிய இடங்களை பெற்று தர நிர்வாகிகள் வலியுறுத்தியதாக அண்ணாமலையிடம் வற்புத்தியதாக தகவல் வெளியனது. கோவை திருப்பூர் நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தங்களுக்கு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், 20 சதவீதம் வார்டுகளையும் ஒதுக்க வேண்டும் என அண்ணாமலை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது . ஆனால் 5 சதவீத வார்டுகளை மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனவும், மேயர் பதவிகளை ஒதுக்க முடியாது என அதிமுக கறாராக சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

கூட்டணி முறிந்தது
அதிமுக கூட்டணி உடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் அதிமுக உடனான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி முடிவடைந்து உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் எனவும், ஒவ்வொரு வீடாக பாஜகவையும் தாமரையும் கொண்டு செல்ல தனித்துப் போட்டியிடுவது ஒரு வாய்ப்பு என்றும் தெரிவித்தார். சிறிது நேரத்தில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்பும் கூறினார். மேலும் தேசிய அளவில் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications