அண்ணாமலை எதுவும் தெரியாமல் பேசுகிறார்..தேயிலை பற்றி என்ன தெரியும்.. வனத்துறை அமைச்சர் ‘நறுக்’கேள்வி
சென்னை: டேன்டீ விவகாரத்தில் ஒருவருக்கு கூட வேலையிழப்பு ஏற்படாத நிலை ஏற்படுத்தப்படும் என்றும் அண்ணாமலை தேயிலை பற்றி எதுவும் தெரியாமல் மேடையில் பேசி வருகிறார் என்றும் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
நீலகிரி, வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டங்கள் (டேன்டீ) உள்ளன.
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இந்த தோட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். டேன் டீ நிறுவனத்துக்கு சொந்தமான இந்த நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.

அண்ணாமலை எதிர்ப்பு
குறிப்பாக தமிழக பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்து தமிழக அரசின் முடிவை கடுமையாக விமர்சித்தது. இது தொடர்பாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பட்டமும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்று தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அண்ணாமலை பேசுகையில், "1823 ஆம் ஆண்டு இலங்கைக்கு தமிழர்களை பிரிட்டிஷார் அழைத்து சென்றனர். இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு இவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

5 லட்சம் தமிழர்கள்
இதையடுத்து, 1963 ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி- சிறிமாவோ பண்டாரநாயகா இடையே ஒப்பந்தம் போடப்பட்டு சுமார் 5 லட்சம் தமிழர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் குறைந்த சம்பளத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த நிறுவனத்தை மூட 5,315 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

நாங்கள் நடத்திக் கொள்கிறோம்
தற்போது குடியிருப்புகளை விட்டு வெளியேற தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். தாயகம் திரும்பிய தமிழர்களை 2- ஆம் தர குடிமக்களாக திராவிட மாடால் அரசு நடத்துகிறது. டேன்டீ நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் ஒப்படைத்து விடுங்கள். நாங்கள் நடத்திக் கொள்கிறோம்.

அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கலாம்
டேன்டீயில் 211 கோடி ரூபாய் கடன், மின்சார வாரியத்தில் 1 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் எல்லாம் நஷ்டம் அடைய அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் காரணம் கிடையாது. தனியார் தோட்டங்கள் லாபகரமாக செயல்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களில் டேன்டீ தூளை விற்பனை செய்தால் 1000 கோடி வருமானம் ஈட்ட முடியும். இதன் மூலம் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கலாம். கூடலூர் பகுதியில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், மனித - வன விலங்குகள் மோதல்கள் நடைபெறுகின்றன. இதற்கு உரிய தீர்வு காணப்படவில்லை" என்று பேசியிருந்தார்.

தேயிலை பற்றி எதுவும் தெரியாமல்..
இந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வனத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் பேசியுள்ளார். குன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "அண்ணாமலை தேயிலை பற்றி எதுவும் தெரியாமல் மேடையில் பேசி வருகிறார். டேன் டீ வரும் காலத்தில் நஷ்டம் ஏற்படாதவாறு செயல்படுத்தப்பட இருக்கிறது.

வேலையிழப்பு ஏற்படாத நிலை
இதற்காக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டேன்டீ விவகாரத்தில் ஒருவருக்கு கூட வேலையிழப்பு ஏற்படாத நிலை ஏற்படுத்தப்படும். தேவாலா பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM2 யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. யானையால் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications