• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போராட்டம் “ஓகே”.. தமிழகம் முழுவதுமா? இல்லை கோவையில் மட்டுமா? அண்ணாமலை அறிக்கையால் தாமரைகள் குழப்பம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு அறிக்கையின் தலைப்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் என்று குறிப்பிட்டுவிட்டு அதன் இறுதியில் கோவையை நோக்கி திரண்டு வாருங்கள் என்று கூறி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி தொகுதியின் திமுக எம்பியும் முன்னா மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசிய கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆ.ராசா தன்னுடைய உரையில், "கிறிஸ்துவராகவோ இஸ்லாமியராகவோ பெர்சியராகவோ இல்லாவிட்டால் நீ இந்துதான் என உச்சநீதிமன்றம் சொல்கிறது.

இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்." என்று கூறினார்.

ஆ.ராசா விவகாரம்:பனாரஸ் இந்து பல்கலை சனாதன தர்மம் நூலை PDF-ல் அனுப்பும் திமுக கார்த்திகேய சிவசேனாபதி ஆ.ராசா விவகாரம்:பனாரஸ் இந்து பல்கலை சனாதன தர்மம் நூலை PDF-ல் அனுப்பும் திமுக கார்த்திகேய சிவசேனாபதி

அண்ணாமலை அறிக்கை

அண்ணாமலை அறிக்கை

இதனை கண்டித்து இந்து முன்னணியினர் நீலகிரியில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் வெளியிட்ட அறிக்கையின் தலைப்பில், "தமிழினத் தாய்மார்களை இழிவுபடுத்திய ஆ.ராசாவை கண்டித்து தமிழமெங்கும் அறவழிப் போராட்டம்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் உள்ளே, "தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தமிழரின் மாண்பையும் தமிழரின் மரபையும் தமிழரின் தொன்மையையும் இறை நம்பிக்கையையும், இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காவல்துறை

காவல்துறை

தமிழகத் தாய்மார்களை, தமிழினத்தை அவமதிக்கும் கருத்திற்கு. கோவை மாவட்டத்தில் ஜனநாயக ரீதியாக, எதிர்ப்பு தெரிவித்த, பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 26ஆம் தேதி, அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது. தமிழ் இனத்தை, தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தி கேவலப்படுத்தும். ஆ ராசா போன்ற ஆளும் கட்சி நபர்களை எல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பொய் வழக்கில் கைது செய்து அச்சுறுத்துகிறார்கள். சில திமுக வழக்கறிஞர்கள் நீதிபதிகளையே அச்சுறுத்தி வருகிறார்கள்.

அஞ்ச மாட்டோம்

அஞ்ச மாட்டோம்

திமுகவின் பொய் வழக்கைக் கண்டும், கைது நடவடிக்கையைக் கண்டும் எந்த பாஜக தொண்டனும் அஞ்சப்போவதில்லை. சிறையை கண்டு அச்சப்பட்டு பின்வாங்கும் அலறித் துடிக்கும், சின்ன செயல் எல்லாம் பாஜகவினர் செய்ய மாட்டார்கள். தவறை யார் செய்தாலும் தட்டிக் கேட்க பாஜக தயங்காது. தமிழினத் தாய்மார்களை தரம் தாழ்ந்து பேசிய ஆ.ராசாவை கைது செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மேல் பொய் வழக்கு போட்டு கைது செய்வது எந்த விதத்தில் நியாயம், காலம் உங்களை கண்டிப்பாக தண்டிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

போராட்டம்

போராட்டம்

கோவை மாவட்டத்தில், தாய்குலத்தை பழித்த, தமிழ் சகோதரிகளை பிறப்பு சொல்லி இழிவு செய்த ஆ.ராசாவின் அவலத்திற்கு நீதி கேட்டு அறவழியில் போராட்டத்தை, நடத்துவோம். தன்மானம் மிக்க தமிழ் சகோதரிகளே கோவையை நோக்கி திரண்டு வாருங்கள், தாய்மார்களே திரண்டு வாருங்கள். மாபெரும் அறவழிப் போராட்டத்தை வரும் 26ஆம் தேதி நடத்துவோம். மக்கள் ஆளும் கட்சியின் அநீதிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tamil Nadu BJP President Annamalai issued a protest announcement condemning DMK Member of Parliament A.Raja mentioned that protest in the All over tamilnadu in title and at the end of it he said to rally towards Coimbatore leads confusion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X