வெள்ளை சட்டை+ காக்கி பேன்ட் அணிந்து! மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளும் அண்ணாமலை! வீடியோ!
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது பண்ணையில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளுவது போன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை. அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். அவர் இணைந்த கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு மாநில தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். அது போல் தேஜகூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனால் தமிழக அரசியல் எப்போதும் பரபரப்புடனேயே காணப்பட்டது. அவருக்கும் கரூர் மாவட்ட அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் செய்வது தொடர்பான மோசடியில் செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்ததை அடுத்து அவர் சிறை சென்றார்.
அது முதல் செந்தில் பாலாஜியை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வந்தார். அது போல் கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதற்கும் அண்ணாமலைதான் காரணம் என சொல்லப்பட்டது.
ஒரு கட்டத்தில் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று டெல்லி பாஜக தலைமையிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கறார் காட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைக்க டெல்லி மேலிடம் விருப்பப்பட்டது. இதையடுத்து அண்ணாமலையின் பதவிக்காலமும் முடிந்ததால் அவரது தலைவர் பதவி நீக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் வசம் ஒப்படைக்கப்பட்டது.
அண்ணாமலைக்கு தேசிய அரசியலில் முக்கிய பதவி கொடுக்கப்படும் என்றும் பேசப்பட்டது. எனினும் அதிமுக- பாஜக கூட்டணி உருவானதில் அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை என்றே கூறப்பட்டது. இதனால் அவர் அரசியலில் இருந்து விலகி இயற்கை விவசாயம் செய்யும் பணிகளில் ஈடுபட போவதாகவும் தெரிவித்திருந்தார்.
பதவியில் இல்லாவிட்டாலும் திமுக அரசை தனது சமூகவலைதள பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வரும் அண்ணாமலை தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் வெள்ளை நிற சர்ட், காக்கி பேன்ட் அணிந்து கொண்டு மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளுவது போன்று வெளியாகியுள்ளது. மேலும் மாடுகளுக்கும் அவர் உணவளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
கொந்தளித்த அண்ணாமலை.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே.. நீட் மறுதேர்வால் மத்திய அரசுக்கு வார்னிங் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications