வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைக்கும் அண்ணாமலை.. கொதிக்கும் பாஜக.. விஜய் மீது சாப்ட் கார்னர் ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவால் வளர்ந்தவர் அண்ணாமலை.. ஆனால் வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைப்பதாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். யாரால் வளர்ந்தோரோ, அவர்களுக்கு எதிராகவே அண்ணாமலை திரும்பிவிட்டதாக சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள், ஒரு காலத்தில் சக்தி வாய்ந்த பாஜக மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. அதிமுக உடன் 2026ல் பாஜக உடன் கூட்டணி வைக்க விரும்பிய போது, மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது ஒதுங்கியிருந்த அண்ணாமலை, அந்த தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்த நிலையில், பாஜகவை விட்டே விலகினார்.

பாஜகவை விட்டு விலகிய பின்னர், வி தலீட்ர்ஸ் என்ற அமைப்பை அண்ணாமலை தொடங்கினார். இந்த அமைப்பின் அலுவலகம் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் ஸ்டைலில் அரசியலில் தனியாக களம் கண்டுள்ள அண்ணாமலை, இன்னும் அரசியல் கட்சியை தொடங்கவில்லை. தனியாக அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு தனது நிர்வாகிகளுக்கு அரசியல் எப்படி எல்லாம் இருக்கும் என்பதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறார். அதன்பிறகு கிளை வாரியாக நிர்வாகிகளை களம் இறக்கி அரசியல் பாதையில் பயணிக்கலாம் என்று கணக்கு போட்டிருக்கிறாராம்.

Annamalai

அதேநேரம் அண்ணாமலை ஆரம்பித்த வீ த லீடர்ஸ் அமைப்பில் இணைந்த பலர் பாஜகவினர் என்று கூறப்படுகிறது. பாஜகவைச் சேர்ந்த பலரையும் தன் அமைப்பில் அண்ணாமலை சேர்த்துக்கொண்டார். தேசிய அளவில் செல்வாக்கான பாஜகவில் இருந்து பலரும் அண்ணாமலையின் வீ தலீடர் அமைப்பில் சேர்ந்துள்ளார்கள். இது பாஜகவிற்கே அப்போது அதிர்ச்சியாக இருந்தது. எனினும் தங்கள் கட்சியில் இருந்து சென்றவர், தங்களை போன்ற சித்தாந்தத்துடன் இருப்பார் என்று பாஜக மேலிடம் நம்பியது.

ஆனால் அண்ணாமலை வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைக்கும் விதமாக பாஜகவையே விமர்சிக்க தொடங்கினார். அதுவும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி விவகாரத்தில அண்ணாமலையின் பேச்சுக்கள் பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. SIR குறித்து பேசிய அண்ணாமலை, டெ ல்லி போலீசார் தலைவர்களைக் கையாளும் விதமும், அவர்களை அலைக்கழிப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் மத்திய அரசு மீது இளைஞர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்றும், தலைவர்களைச் சிறையில் அடைப்பதால் அவர்கள் மேலும் பெரிய தலைவர்களாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார். மகாத்மா காந்தி பலமுறை சிறைக்குச் சென்றதன் மூலம் பெரிய தலைவராக உருவெடுத்ததைச் சுட்டிக்காட்டினார். அதேபோல் ராகுல் காந்தியின் தனிப்பட்ட வியட்நாம் பயணத்தை விமர்சிப்பது தவறு என்றும் அண்ணாமலை கூறினார். இதனால் கொதித்து போன பாஜக, அண்ணாமலையை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளது.

பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில், பாஜகவால் அடையாளம் பெற்று வெளியேறியவர்கள், பாஜகவிலிருந்து மட்டும் வெளியேறவில்லை. பாஜக தொண்டர்களுக்கு உயிர்மூச்சான தேசியம், இந்துத்துவத்தில் இருந்தும் வெளியேறி விட்டார்கள் என்பதை, ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார்கள். யார் கொள்கை வழி நிற்பவர்கள் என்பதை இப்போது, தேசியவாதிகள் புரிந்து கொண்டிருப்பார்கள். கரப்பான் பூச்சியை ஆதரிப்பவர்கள் நிச்சயம் தேச விரோதிகள்தான், இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் அன்னிய நாடுகளின் சதித் திட்டத்திற்கு உடன்படுபவர்கள்தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் . மறுபக்கம் விஜய் மீது அண்ணாமலையின் விமர்சனங்கள் இன்று வரை கடுமையாக இல்லை. நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது தொடங்கி பல்வேறு விவகாரங்களில் அண்ணாமலையின் பேச்சுக்கள் சாப்ட் ஆகவே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+