சமாதிக்கும் சாவுக்கும் என்ன வித்தியாசம்?.. எத்தனை வகை சமாதி நிலை? சிரிக்காமல் விளக்கிய அன்னபூரணி
சென்னை: சமாதிக்கும் சாவுக்கும் இடையேயான வித்தியாசம் குறித்து அன்னபூரணி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அன்னபூரணி அரசு அம்மா தனது யூடியூப் சேனலில் ஆற்றிய "சொற்பொழிவில்" , சமாதி என்றால் என்ன? சமம்+ ஆதி என்பதாகும். அதாவது அந்த ஆதிமூலத்துடன் சமமாக இருப்பது, அத்துடன் சங்கமித்து இருப்பது. இறைத்தன்மையுடன் கலந்திருப்பது. ஆன்மீகம் சார்ந்தவர்கள் என தங்களை காட்டி கொள்கிறார்கள் என்றாலே அதன் குறிக்கோள் அல்லது இலக்கு என முடிவு செய்து வைத்துள்ளது சமாதி நிலைதான்.
எந்த மாதிரியான சமாதி நிலை என்றால், கண்ணை மூடி உட்கார்ந்தால் 3 ஆண்டுகள் 3 நிமிடம் மாதிரி போய்விட வேண்டும் என்கிறார்கள். இந்த மாதிரியான சமாதி நிலை இருக்கிறதா என கேட்டீர்களேயானால் இருக்கிறது. இதை அடைந்து என்ன செய்ய போகிறீர்கள்?

சுவாசம் இல்லாமல் வாழ்ந்த யோகிகள்
அந்த காலத்தில் யோகிகள் பூமிக்கடியில் சுவாசம் இல்லாமல் உட்கார்ந்திருந்தார்கள். தனக்குள் இருந்த ஆற்றல் சக்தியை சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்ந்தார்கள். சாப்பிடாமலும் உயிர் வாழ்ந்தார்கள். இது போல் அவர்கள் நிறைய விஷயங்களை செய்துள்ளார்கள். ஆனால் அன்று அவர்கள் இருந்த நிலை வேறு. அவர்கள் குடும்பத்திலோ, தொழிலிலோ, வியாபாரத்திலோ இல்லை. அவர்களுடைய வாழ்க்கையை இதற்காகவே அர்ப்பணித்திருந்தார்கள்.

எப்படி சரிவரும்
இப்போது இருக்கும் கால கட்டத்தில் எப்படி சரியாக வரும்? சரி நீங்கள் 3 வருட சமாதி நிலைக்கு சென்றுவிட்டால், உங்களுடைய குடும்பமும் தொழிலும் என்னவாகும்? சமாதி என்பது உங்கள் உயிர் தன்மையுடன் இறைத் தன்மையுடன் கலந்திருக்கும் நிலையை குறிப்பதுதான் சமாதி. மனிதன் எந்த தலங்களில் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். மனதின் தலம், எண்ணங்களின் தலம், அறிவின் தலம், ஆணவ தலம் என பேசியுள்ளேன்.

அனுபவிக்காத சமாதி நிலை
இது இல்லாமல் மனிதனுக்கு தெரியாத அவன் அனுபவிக்காத நிலைதான் சமாதி நிலை. இதில் முதலில் சவி கல்ப சமாதி நிலையாகும். அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ தியானம் செய்யும் போது எங்கே இருக்கிறோம், எங்கே போனோம், எங்கே வந்தோம் என்பதே தெரியாமல் ஒரே நொடியில் அந்த அரை மணி நேரத்தை கடந்து விடுவதுதான். அப்போதுதான் கண்ணை மூடி உட்கார்ந்த மாதிரி இருக்கும். ஆனால் அதற்குள் அரை மணி நேரம் போயிருக்கும்.

அன்னபூரணி வீடியோ
அடுத்தது நிர்வி கல்ப சமாதி. இதில் இரு ஆண்டுகள், 3ஆண்டுகள் என சமாதி நிலையில் இருத்தல் ஆகும். புற வாழ்க்கை அனைத்தையும் விட்டுவிட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி உடலோடு ஒடுங்கி இருந்து காலமற்ற நிலையில் இருப்பதுதான் இந்த நிர்வி கல்ப சமாதியாகும். அடுத்தது சகஜ சமாதி- நீங்கள் உணர்வு தலத்தில் ஒடுங்கியிருப்பீர்கள். ஆனால் வெளியில் அத்தனை செயல்களும் பாதிப்பில்லாமல் சரியாக நடந்து கொண்டிருக்கும். நீங்கள் உள்தன்மையில் இருப்பீர்கள், வெளித்தன்மை சார்ந்து செயல்பட மாட்டீர்கள். உங்கள் தொழில், வியாபாரம் இதெல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும், அதே வேளை நீங்கள் வந்த வேலையும் நடக்கும்.

சமாதிக்கும் சாவுக்கும் வித்தியாசம் என்ன
சமாதிக்கும் சாவுக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்ப்போம். சமாதியில் இருக்கும் போது இறைவனோடு உயிர் தன்மையோடு இரண்டற கலந்து இருப்பதால் உடல் தனியாகவும் உயிர் தனியாகவும் இருக்கும். இது சமாதி நிலை. இயற்கை எப்போது உங்கள் உடலை கேட்கிறதோ அப்போது உங்கள் உடலை சந்தோஷமாக கொடுத்துவிட்டு ஆனந்தமாக விடை பெறுவீர்கள். சாவு என்றால் நீங்கள் உடலோடு ஒட்டி இருந்து உடலை பற்றிக் கொண்டு இருக்கும் போது இயற்கை உடலை வந்து பறித்து எடுத்து சென்றால் அதுதான் சாவு. வாழும் காலத்தில் உடலோடு ஒன்றாமல் வாழுங்கள். அப்படி வாழும் போது எந்தவித கஷ்டமோ நஷ்டமோ வராது என கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications