சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Exclusive: ஆக்ஸிஜன் தேவையை 'கிளவிரா' மாத்திரை குறைக்கிறது... அபெக்ஸ் நிறுவனம் அளிக்கும் நம்பிக்கை..!

Google Oneindia Tamil News

சென்னை: அபெக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஆயுர்வேத மருந்தான 'கிளவிரா' என்ற மாத்திரை லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended Video

    கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆயுர்வேத மாத்திரையை தயாரித்துள்ளது அபெக்ஸ் நிறுவனம்

    மருந்து தயாரிப்பில் 42 ஆண்டுகால அனுபவம் கொண்ட அபெக்ஸ் ஆய்வகம் சார்பில் 'கிளவிரா' மாத்திரை குறித்து நம்மிடம் விளக்குகிறார் அந்நிறுவனத்தின் மேலாளர் ஆர்தர் பால்.

    அதன் விவரம் பின்வருமாறு;

    42 ஆண்டுகாலம்

    42 ஆண்டுகாலம்

    ''அபெக்ஸ் லேபாரட்டரிஸ் நிறுவனமானது 42 ஆண்டுகால பாரம்பரியமிக்கது. ஆங்கில மருந்து தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஆயுர்வேதா -சித்தா மருந்துகளையும் தயாரித்து வருகிறோம். கிரீன் மில்க் கான்செப்ட் அடிப்படையில் இந்த மருந்துகளை நாங்கள் தயார் செய்கிறோம். இதற்காக டெடிகேடட் பிளாண்ட் அமைக்கப்பட்டு சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவர்களின் மேற்பார்வையில் மருந்துக்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்து அதை செறிவூட்டி மருந்துகளாக உற்பத்தி செய்கிறோம்.''

    'கிளவிரா'

    'கிளவிரா'

    ''அந்த வகையில் இப்போது 'கிளவிரா' என்ற ஆயுர்வேத மாத்திரையை எங்கள் நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட மூலபொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 5 வகையிலான சோதனைக் கட்டத்தை நிறைவு செய்த பிறகு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதியை பெற்று இப்போது இந்த மாத்திரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இதன் கிளினிக்கல் டிரைல் 2020-ம் ஆண்டே வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இருப்பினும் அதற்கு பிறகு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி இப்போது தான் வெளியிட்டுள்ளோம்.''

    14 நாட்களுக்கு

    14 நாட்களுக்கு

    ''கிளவிரா மாத்திரையை பொறுத்தவரை லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளிக்கிறது. சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டதில் நூற்றில் 86 பேர் பூரண குணம் அடைந்துள்ளார்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு மாத்திரை வீதம் எடுத்துக் கொள்ளலாம். நோய் தொற்று இல்லாதவர்கள் 5 நாட்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது.''

     நம்பகத்தன்மை

    நம்பகத்தன்மை

    ''கிளவிரா மாத்திரையில் உள்ள மூலப்பொருட்கள் ஆக்ஸிஜன் தேவையை குறைக்கிறது. ஆக்ஸிஜன் சமநிலையில் இருப்பதற்கு உதவுகிறது. இந்த மருந்தின் மூலம் மற்ற உடலின் முக்கிய உறுப்புகளுக்கு எவ்வித பக்க விளைவும் ஏற்படாது. சிலருக்கு மட்டும் வயிற்றுப்புண், வாந்தி போன்ற லேசான பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். மற்றபடி இந்த மருந்தின் நம்பகத்தன்மையை பற்றி பொதுமக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வுக்கு பிறகு தான் அனுமதியே தரப்பட்டுள்ளது.''

    English summary
    Apex laboratories explaining about Clevira tablet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X