சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கலக்கும் தலைநகர்.. சென்னைக்கு வருகிறது ஐபோன் உற்பத்தி.. பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்த வருடத்தில் இருந்து சென்னையில் ஃபாக்ஸ்கான் போன் உற்பத்தி ஆலையில் ஐபோன் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

ஆசியாவின் டெட்ராய்ட் என்று சென்னை அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு சென்னையில் ஆட்டோமொபைல் சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக சென்னையில் எலக்ட்ரானிக் சாதனங்களும் அதிக அளவில் தயார் செய்யப்பட்டு வருகிறது. சென்னையை நோக்கி பிரபல தொலைபேசி நிறுவனங்கள் படை எடுத்து வருகிறது.

ஐபோன் நிறுவனம்

ஐபோன் நிறுவனம்

இந்த நிலையில் உலகின் முன்னணி தொலைபேசி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சென்னையில் தொடங்க உள்ளது. 2019ல் இருந்து சென்னையில் ஐபோன் உற்பத்தியை செய்ய உள்ளது. ஐபோனின் உயர் ரக மாடலான ஐபோன் எக்ஸ் (ஐபோன் 10) சென்னையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

சென்னையில் எங்கு

சென்னையில் எங்கு

சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புத்தூரில் ஃபாக்ஸ்கான் போன் உற்பத்தி ஆலை அமைந்து இருக்கிறது. இந்த உற்பத்தி ஆலையில்தான் தற்போது ஐபோன் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக அங்கு ஐபோன் தயாரிப்பு ஆலை ஒன்று புதிதாக நிறுவப்பட உள்ளது.

என்ன சிறப்பு

என்ன சிறப்பு

பொதுவாக முன்னணி தொலைபேசி நிறுவனங்கள் எல்லாம் தங்கள் ஆலைகளை பெங்களூரில் அமைக்கவே அதிக விருப்பம் தெரிவிக்கும். ஆனால் தற்போது தமிழகத்தில் இது போன்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் காரணமாக, அதிக அளவிலான நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகிறது.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

பெங்களூரில் உள்ள பீனியாவில் ஐபோன் உற்பத்தி மையம் இருந்தது. தற்போது இங்கு செய்யப்படும் உற்பத்தியும் சென்னைக்கு மாற்றப்படும் என்று கூறுகிறார்கள். ஃபாக்ஸ்கான் போன் உற்பத்தி ஆலையில் ஏற்கனவே 13,500 பெண்கள் உட்பட 15000 பேர் வேலை பார்க்கிறார்கள். இந்த புதிய ஐபோன் உற்பத்தியால் இன்னும் பல்லாயிரம் ஊழியர்கள் வேலைக்கு சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Apple will manufacture its I Phone X model from Chennai hereafter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X