அரசகுமார் பொய் சொல்லி ரூ.100 கோடி வசூல்.. நான் எப்படி பொறுப்பாக முடியும்? அன்பில் மகேஷ் வைத்த வாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசகுமார் பொய் சொல்லி ரூ.100 கோடி பணம் வசூலித்தார் என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பு குற்றம்சாட்டி இருக்கிறது. அரசகுமார் கூறிய பொய்க்கு தாம் பொறுப்பாக முடியாது என்று கூறியுள்ள அன்பில் மகேஷ், லஞ்சம் கொடுத்ததாக கூறியவர்களை கைது செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அனுமதி பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அக்டோபர் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Anbil Mahesh Education DMK

இதனிடையே 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று தனியார் பள்ளிகள் கூறினர்.

இதுதொடர்பாக தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறப்பட்டு, இறுதியாக 20 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்குவது என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில் கூடுதல் செயலாளர் தான் கையெழுத்திட்டார். அன்பில் மகேஷ் கையெழுத்து போடவில்லை. இதன் மூலமாக அரசு அதிகாரிகள் கூட்டாக எடுத்த முடிவு என்று தெளிவாகிறது.

அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பொய் சொல்லி அரச குமார் ரூ.100 கோடி பணம் வசூலித்தார். அரச குமார் பொய் கூறி இருந்தால், நான் பொறுப்பாக முடியாது. 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிப்பது குறித்த அரசாணையில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள போது, எப்படி பணம் பெற்று கொண்டு சாதகமாக செயல்பட்டதாக கூற முடியும்?

இந்த அரசாணை தான் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. எந்த நிபந்தனைகளும் இல்லாமல் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் வழங்கி இருந்தால், சட்டத்தை வளைத்ததாக கூறலாம். அங்கீகாரம் வழங்குவது தொடர்பான அரசாணை பல்வேறு துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, அரசாணையாக பிறப்பிக்கப்பட்டது.

அதேபோல் லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? அவர்களை ஏன் கைது செய்யவில்லை? லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் அனைவரும் அவரவர் வீட்டில் தான் இருக்கின்றனர். லஞ்சம் கொடுப்பது குற்றம் என்று தெரிந்தும் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. லஞ்சம் கொடுத்தவர்கள் சாட்சிகளாக ஆக்கப்பட்டுள்ளானர்.

அரசு அதிகாரிகள் சதியில் ஈடுபட்டார்களா என்பதை காவல்துறை தான் விசாரிக்க வேண்டும். 3 நாட்களாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எந்தவித ஆதாரத்தையும் கலைக்க மாட்டார். அதேபோல் ஊழல் வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கும் போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை எதற்கு? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+