"கேம் சேஞ்ச்".. பட்ட பாடெல்லாம் போச்சே.. டபுள் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. அந்த 4 பேருமா?.. குறுக்கே பாஜக வேற
எடப்பாடி பழனிசாமி தரப்பு 2 விதமான வியூகங்களை கையில் எடுக்க போவதாக சொல்கிறார்கள்
சென்னை: மெஜாரிட்டி அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி "தற்சமயம்" கொண்டு வந்துள்ள நிலையில், 2 விதமான திட்டங்கள் முன்னெடுக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுகவின் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓபிஎஸ்ஸுக்கம் இடையே மல்லுக்கட்டுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இரு தரப்புமே கோர்ட்டுக்கு சென்றுள்ளனர்.. இரு தரப்புமே ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள்.

2532+ பேர் ரெடி
ஆனாலும் எடப்பாடிக்கே மெஜாரிட்டி ஆதரவு கிடைத்து வருகிறது.. இன்னும் சில நாட்களில், பொதுக்குழுவை கூட்டி, தேர்தலை நடத்த போகிறார்கள்.. அதில் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கு முன்னதாக, 2532 பொதுக்குழு உறுப்பினர்களிடமும், பிரமாண பத்திரத்தை பெற்றுவிட்டது எடப்பாடி பழனிசாமி தரப்பு.. தற்போது 2 முக்கிய முடிவுகளை எடப்பாடி டீம் எடுத்துள்ளதாம்.. ஒன்று தற்போதே செயல்படுத்துவது, மற்றொன்று பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததுமே செயல்படுத்தக்கூடியதாம்...

திமிறி எழும் எடப்பாடி
அந்தவகையில், மதுரை பயணத்தை எடப்பாடி பழனிசாமி துவங்குகிறார்.. கட்சியில் தனக்கு மட்டுமே செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த தென் மாவட்டங்களில் சுற்றுப்பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன... அந்தவகையில்தான் மதுரை பயணம் முதலில் டிக் செய்யப்பட்டுள்ளது.. பிரமாண்ட பொதுக்கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இதனால், செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, ராஜேந்திர பாலாஜி போன்றோர் அதற்கான பணிகளில் களமிறங்கிவிட்டனர்..

பழங்காநத்தம் ப்ளான்
இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்ட பிறகு, முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி வருவதால், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட சுற்றுப்பயணங்களில் ஒட்டுமொத்த தொண்டர்களையும் திரட்டும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன... மதுரை பழங்காநத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களை அதாவது சுமார் 20 ஆயிரம் பேர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் பிளான் செய்துள்ளனர்..

டேமேஜ்
பொதுக்கூட்டங்களில் திமுகவை வழக்கம்போல் டேமேஜ் செய்து பேசினாலும், ஓபிஎஸ் தரப்பை மேலும் விமர்சிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.. இப்போது பெரும்பாலான மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசிவரும் நிலையில், அதை தென்மண்டலங்களுள்ளேயே அதாவது ஓபிஎஸ் கோட்டைக்கு உள்ளேயே நுழைந்து அட்டாக் செய்வதுதான் பிரதான பணியாக உள்ளதாம்.. பொதுக்குழு கூட்டுவதற்குள் தென்மண்டலங்களில் இத்தகைய அரசியலை செய்துவிட வேண்டும் என்று எடப்பாடி டீம் முனைப்பாக உள்ளதாம்..

20 சீட்டுகள்?
இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்.. சமீபத்தில் பாஜக தலைவர் நட்டா மதுரை வந்து சென்றதற்கும், எடப்பாடி தற்போது மதுரை செல்வதற்கும் ஒருவித தொடர்பு இருப்பதாகவே கூறுகிறார்கள்.. மதுரையை பொறுத்தவரை பாஜக அரசியலுக்கு மிகவும் சென்ட்டிமென்ட்டான இடம்.. இதே மதுரையில்தான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, எம்பி தேர்தல் ஆலோசனை குறித்த முதல் கூட்டத்தை அண்ணாமலை கூட்டியிருந்தார்.. இப்போது வந்திருந்த நட்டாவும், அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பாஜக தலைவர்களிடம் இதே மதுரையில்தான் பேசிவிட்டு போனாராம்.. இரட்டை இலக்க சீட்களை பாஜக கேட்டாலும், அதற்கும் ஓகே சொல்லக்கூடிய நிலைமையில் எடப்பாடியும் உள்ளதால், மதுரையை டார்கெட் செய்து வலையை வீசியுள்ளார் எடப்பாடி.

4 புள்ளிகள்
இன்னொரு பேச்சும் உள்ளது.. பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது என்ற முடிவையும் யோசித்து வருகிறதாம் எடப்பாடி டீம்.. கட்சியில் இருந்து வெளியேறியவர்களின் அரசு பதவிகளை நீக்க, அக்கட்சி தலைவர் உரிமை கோரலாம் என்ற விதி உள்ளநிலையில், அந்த அஸ்திரத்தைதான் எடப்பாடி கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. அதன்படிபார்த்தால், ஓபிஎஸ் + வைத்திலிங்கம் + மனோஜ் பாண்டியன் + அய்யப்பன் என 4 பேரின் எம்எல்ஏ பதவிகளையும் பறிப்பது என்றும் திட்டம் ஒன்று உள்ளதாம்.. இப்படியெல்லாம் பரபரப்பு யூகங்களும், தகவல்களும் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன..!
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications