சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஹை டென்ஷன்".. அந்த மேஜர் "ரகசியம்" வெளியிடுகிறாராம் ஓபிஎஸ்.. வெலவெலக்கும் எடப்பாடி?.. என்ன தெரியுமா

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான திட்டம் ஒன்றை ஓபிஎஸ் கையில் எடுக்க போகிறாராம்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நேரடியாகவே களமிறங்க போகிறாராம் ஓபிஎஸ்.. இது தொடர்பான தகவல், அதிமுக கூடாரத்தில் கசிந்து வருகிறது... என்னவா இருக்கும்?

ஓபிஎஸ், நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.. முன்பெல்லாம் ஓபிஎஸ் அவ்வளவாக பேட்டிகளை தர மாட்டார்..

அப்படியே பேட்டிகளை தந்தாலும், பட்டும் படாமல், குறிப்பாக, எதிர்க்கட்சிகளை தடித்த வார்த்தைகள் எதுவும் இல்லாமல், மென்மையான கருத்தை மட்டுமே பதிவு செய்வார்.. ஆனால், இப்போது அப்படி இல்லை.. அவரது அரசியல் பாணியே மாறியிருக்கிறது. நேரடியாக எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்து பேசுகிறார், சவால் விடுத்து பேசுகிறார்..

Exclusive: கொங்கு கட்சியா அதிமுக? திமுக இந்தி எதிர்ப்புக்கு இதுதான் காரணம்! விபிபி பரமசிவம் அதிரடி! Exclusive: கொங்கு கட்சியா அதிமுக? திமுக இந்தி எதிர்ப்புக்கு இதுதான் காரணம்! விபிபி பரமசிவம் அதிரடி!

 சிலுவம்பாளையம் பழனிசாமி

சிலுவம்பாளையம் பழனிசாமி

நேற்றைய தினம்கூட செய்தியாளர்களிடம் பேசும்போது, முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.. "எடப்பாடிக்கு முதல்வர் பதவியை யார் கொடுத்தது சசிகலாதான்.. பதவி தந்தவருக்கே துரோகம் செய்யலாமா? தவழ்ந்து வந்த இவரை சசிகலா தட்டி கொடுத்து முதல்வராக்கினாரே.. அப்படிப்பட்ட சசிகலாவுக்கே இவர் துரோகம் செய்தவர்தானே? என்று கேட்டார்.. உள்ளார். ஓபிஎஸ் கேட்ட இந்த கேள்வி, நியாயம்தானே? எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்வது உண்மைதானே? என்ற சலசலப்பும் அதிமுக தொண்டர்களிடமும் கிளம்பி உள்ளதாம்..

ஜெர்க்

ஜெர்க்

இந்நிலையில், ஓபிஎஸ் குறித்த இன்னொரு தகவலும், களத்தில் பரபரப்பாக வட்டமடித்து வருகிறது.. எடப்பாடிக்கு எதிராக இதுவரை வெளிவராத சில ரகசியங்களை அம்பலப்படுத்த திட்டமிட்டிருக்கிறாராம் ஓபிஎஸ்.. நாமக்கல் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்சை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார். அவருடைய இந்த பேச்சு அதிமுகவில் மீண்டும் ஒரு ஜெர்க்கை ஏற்படுத்தியது. குறிப்பாக, எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்டவர்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவலாம் என நினைத்திருந்த சூழலில், எடப்பாடியின் அந்த பேச்சு அவர்களை யோசிக்க வைத்திருக்கிறதாம். இதனால் தாவல் படலம் சற்று அமைதியாகியிருக்கிறது.

ரகசியம்

ரகசியம்

இதற்கிடையே, எடப்பாடியின் பேச்சு குறித்து ஓபிஎஸ்சும் தனது ஆதரவாளர்களிடம் விவாதித்துள்ளதாக தெரிகிறது.. "உங்களை இணைக்க மாட்டேன் என எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக பதிவு செய்து வருவதை பார்த்தால், எடப்பாடியின் துரோகத்தை சகிக்க முடியாமல் உங்களை ஆதரிக்க முன்வருபவர்களை தடுக்கும் யுக்தியாகவே தெரிகிறது.. இதனால், அவருக்கு எதிரான விஷயங்களை நீங்களும் ஓப்பனாக பேச வேண்டும்" என்று ஓபிஎஸ்ஸிடம் அவரது ஆதரவாளர்கள் சொன்னார்களாம்..

ரிப்பீட்டு

ரிப்பீட்டு

இதனையடுத்துதான், தங்கமணி வேலுமணி தம்மிடம் பதட்டமாக ஓடி வந்தனர் என்று ஓபிஎஸ் பேசியதுடன், அது தொடர்பான பல்வேறு விஷயங்களை போட்டு உடைத்தாராம்.. ஓபிஎஸ் இப்படி பதிலடி தந்திருப்பது, அவரை நம்பி அவரது தலைமையை ஏற்றுக்கொண்டவர்களை திருப்திப்பட வைத்திருக்கிறது என்கிறார்கள்... இந்த நிலையில், தனக்கு எதிராக எடப்பாடி கடுமையாக பேசிக்கொண்டேயிருந்தால், எடப்பாடிக்கு எதிராக அந்த ரகசியத்தை அம்பலப்படுத்தக்கூட தயங்க மாட்டேன் என்று திடமாக சொல்லி வருகிறாராம் ஓபிஎஸ்..

"மையம்"

அது என்ன ரகசியம் என்பதை ஓபிஎஸ் தரப்பில் விசாரித்தபோது, "ஓபிஎஸ்சை தர்மயுத்தம் நடத்தச் சொன்னது யார்? எந்த சூழலில் அது சொல்லப்பட்டது? இதற்காக நடந்த ஆலோசனை என்ன? அந்த ஆலோசனை எங்கு நடந்தது? ஆலோசனையில் அவரிடம் என்னவெல்லாம் சொல்லப்பட்டது? அதன் பிறகு நடந்தது என்ன? என்கிற பல ரகசியங்கள் ஓபிஎஸ்சிடம் இருக்கிறது. நாகரீகம் கருதி அதையெல்லாம் அம்பலப்படுத்தாமல் இருக்கிறார். இனி, தேவைப்பட்டால் அதனை அம்பலப்படுத்துவார்" என்கிறார்கள் நம்மிடம் ரகசியமறிந்தவர்கள்.

 டாப் ஐடியா

டாப் ஐடியா

அன்றைய தினம், சசிகலாவையும், தினகரனையும் எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தத்தை நடத்தினார்.. ஆட்சியில் மக்களும், தொண்டர்களும் விரும்புவர்களே அமர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.. சசிகலாவை முதல்வராக்க அதிமுகவில் சிலர் முயற்சி செய்த அதேசமயம், தர்மயுத்தம் நடத்தி ஜெயலலிதா மரணத்தில் விசாரணை தேவை என்று ஓபிஎஸ் சொன்னதே, அதிமுகவின் பிளவுக்குக் காரணமானது என்பது அனைவரும் அறிந்ததுதான்.. இப்படிப்பட்ட தர்மயுத்தத்தை ஓபிஎஸ் அன்று கையிலெடுக்க மூளையாக செயல்பட்டது கேபி முனுசாமி என்பதும் அனைவரும் அறிந்ததே என்றாலும், இதில் எப்படி எடப்பாடி சம்பந்தப்பட்டுள்ளார் என்பதுதான், சஸ்பென்ஸை கூட்டி வருகிறது.. அப்படின்னா, அதிமுகவில் பலமாக மையம் கொண்டுவிட்டதாகவே தெரிகிறது இன்னொரு புயல்..!!

English summary
Are the OPS Team implementing the plan against Edappadi Palanisamy and What is the Major secret
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X