சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 "விவிஐபிகள்".. உடனே ஆரம்பிங்க.. களமிறங்கிய "வாரிசு".. எடப்பாடியின் "அடையாளம்" மாறுதா.. அப்ப ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி தரப்பு தேவர் சமுதாய வாக்குகளை முழுமையாக பெறக்கூடுமா

Google Oneindia Tamil News

சென்னை: தென்மண்டல அதிமுக குறித்து ஒரு முக்கிய செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.. மொத்தம் 4 முக்கிய தலைவர்களாம்.. அவர்களின் செயல்பாடுகளையும், அடுத்தடுத்த நிகழ்வுகளையும் முக்குலத்தோர் உற்று கவனித்து வருகிறார்களாம்.. என்ன நடக்கிறது?

தேவர் ஜெயந்தி வரஉள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? தேவர் சமுதாயத்தை எப்படி கவர போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது..

ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்கும் விதமாகவும், தென்மண்டல வாக்குகளை அள்ளுவதற்காகவும், அச்சமூக மக்களின் மனதை குளிர வைப்பதற்காகவும், பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசனுக்கும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ஆர்பி உதயகுமாருக்கும் தந்தார்..

மதுரையையும் கொஞ்சம் பாருங்க.. எடப்பாடி எடுத்த ஆக்‌ஷன் அப்படியே நின்னுடுச்சு.. ஆர்பி உதயகுமார் பரபர! மதுரையையும் கொஞ்சம் பாருங்க.. எடப்பாடி எடுத்த ஆக்‌ஷன் அப்படியே நின்னுடுச்சு.. ஆர்பி உதயகுமார் பரபர!

 சிலை + தலை

சிலை + தலை

அதற்கு பிறகு வேறு சில அதிரடிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.. ஓபிஎஸ் பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன்பே, தெற்கில் சுற்றுப்பயணத்தை துவங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்ததுடன், இறந்த போன அந்தந்த சமூக தலைவர்களின் சிலைகளுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்துவது, அந்த தலைவர்களின் சேவையை எடுத்துரைப்பது, போன்றவைகளை செய்து, முக்குலதோர் சமுதாயத்தை கவரவும் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.. இதற்காக ஒரு மாதத்துக்கு முன்பேயே, 4 பேரை களமிறக்கி உள்ளார்.. அவர்கள் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு ஆகியோர் ஆவர்.

 4 மாஜிக்கள்

4 மாஜிக்கள்

இந்த 4 பேருமே ஓபிஎஸ் பக்கம் நிற்காமல், அன்றே எடப்பாடி பக்கம் சாய்ந்தவர்கள்.. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலம் முழுக்க, கொங்கு மண்டலத்தையே வளர்த்தவர்.. கொங்கு சமுதாயத்துக்கே அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தவர்.. போதாக்குறைக்கு வடமாவட்ட மக்களின் ஓட்டுக்காக, வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக ஆதரவு காட்டியவர்.. இதெல்லாம் சேர்ந்து கொங்கு மக்களிடம் அதிருப்தியாய் பெருகி உள்ள நிலையில், முக்குலத்தோரின் 4 மாஜிக்களும், எதற்காக எடப்பாடி பக்கம் சாய வேண்டும் என்ற கோபம் தென்மண்டலவாசிகளிடம் உள்ளதாம்.

 அறுவடை

அறுவடை

இதற்கான தாக்கம் நிச்சயம் அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி நாளில் தெரியும் என்கிறார்கள்... இதற்கு நடுவில், எடப்பாடி மீதான அதிருப்தியை, ஓபிஎஸ் தரப்பு அறுவடை செய்து வரும் நிலையில், எடப்பாடி பக்கம் முக்குலத்தோர் சமூகத்து தலைகளை ஓபிஎஸ்சின் மகன்களான ஓபிஆரும், ஜெயபிரதீப்பும் தங்கள் பக்கம் இழுக்க ரகசியமாக தொடர்புகொண்டு பேசிவருகிறார்களாம்... இதில் ஓபிஆர்ரைவிட ஜெயபிரதீப் ஆர்வமாக இருக்கிறார் என்றே தெரிகிறது.. அதுமட்டுமல்ல, தன் அப்பாவுக்கு ஆதரவாக இயங்கும் நபர்களுக்கு சில பரிசு பொருட்களையும் தந்து ஸ்பெஷலாக கவனிக்கிறாராம்.

 கப்சிப் மோடு

கப்சிப் மோடு

அதற்கேற்றவாறு, எடப்பாடி கூடாரத்தில் சில முக்கிய தலைவர்கள், ஓபிஎஸ் பற்றி வாயே திறக்காமல் கப்சிப்பென்று இருக்கிறார்களாம்.. பெயரளவு அறிக்கைகூட விடுவதில்லையாம்.. இதெல்லாம் சேர்ந்து எடப்பாடிக்கு கடுப்பை ஏற்படுத்தி வந்தாலும், ஓபிஎஸ் டீம் ஜரூர் பணியில் இறங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.. சசிகலா + ஓபிஎஸ் இருவரும் தேவர் ஜெயந்திக்குள் நேரடியாகவே சந்திக்கக்கூடிய வாய்ப்புகளும் இருக்கும் என்கிறார்கள்.. அந்தவகையில், வரப்போகும் தேவர் ஜெயந்தி, ஓபிஎஸ் டீமுக்கு உற்சாகத்தை நிச்சயம் தரக்கூடும்.. ஆனாலும் அந்த 4 பேருக்கான ஆதரவு, தென்மண்டலங்களில் எப்படி இருக்க போகிறது என்பது அன்றைய தினம் தெரிந்துவிடும்..!!!

English summary
Are the supports gathering for the OPS team and Who are the 4 Ex Ministers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X