கண்ணை உறுத்திய ஓபிஎஸ்ஸின் "காவித்துண்டு".. எடப்பாடிக்கு தந்த "மெசேஜ்".. விரைவில் புதிய மாற்றங்களாமே?
ஜேபி நட்டாவுடன் சில முக்கிய விஷயங்களை ஓபிஎஸ் பகிர்ந்து கொண்டாராம்
சென்னை: பாஜக தலைவர் நட்டாவை ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசியதைடுத்து, சில முக்கிய தகவல்கள் இன்னும் 2 நாளில் வெளியாகக்கூடும் என்றும், அதிமுக முகாமில் புதிய மாற்றங்களுக்கு இந்த சந்திப்பு விரைவில் வித்திடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஜி - 20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் கூட்டங்கள் குறித்து, பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்றது.
முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, மாநில முதலமைச்சர்களுக்கும், பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

டேமேஜ் இமேஜ்
அந்தவகையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு வந்து சேர்ந்தது. இத்தனை மாதமும், இடைக்கால பொதுச்செயலாளராக பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமியை ஏற்று கொள்ளாத நிலையில், "அதிமுக இடைக்கால பொது செயலாளர்" என்று குறிப்பிட்டே அழைப்பிதழ் விடுக்கப்பட்டது. இது எடப்பாடி தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. அதேசமயம், ஓபிஎஸ்ஸுக்கு இது கடுப்பை தந்துள்ளதாக தெரிகிறது.. அவ்வாறான அழைப்பு இல்லை என்பதால், ஓபிஎஸ்ஸை பாஜக மேலிடம் கழட்டிவிட்டுவிட்டதோ, எடப்பாடியை மட்டும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுவிட்டதோ? என்ற கேள்விகள் இணையத்தில் வலம் வர ஆரம்பித்து விட்டன.

சாய்ஸ் சான்ஸ்
இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு எதுவுமே பேசாமல் இருந்தநிலையில், திடீரென இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார்.. பிறகு டெல்லிக்கு சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாகவும், அப்படி டெல்லி செல்லும் பட்சத்தில், பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷாவை நேரடியாகவே சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.. இந்நிலையில்தான், குஜராத்தில் நடந்த முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் கலந்து கொண்டிருந்தார்.. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எரிச்சலையும் சலசலப்பையும் உண்டாக்கினாலும், ஓபிஎஸ் டீமுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

அலங்காரம்
குஜராத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து ஓபிஎஸ் எடுத்துக் கொண்ட போட்டோக்களும் எடப்பாடி தரப்புக்கு டென்ஷன் ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.. குஜராத் முதல்வர் பதவியேற்புக்கு ஓபிஎஸ்ஸையும் அழைத்ததை, மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டு வருகிறஷது.. நட்டா - ஓபிஎஸ் சந்திப்பின்போது பல விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.. அநேகமாக அதிமுக முகாமில் புதிய மாற்றங்களுக்கும் இந்த சந்திப்பு விரைவில் வித்திடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

காவித்துண்டு
மேலிட தலைவர்களை சந்தித்து பேசினால், நிச்சயம் தனக்கு அதிமுகவில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் குறித்து ஓபிஎஸ் புகார் அளிப்பார் என்றும், முக்கியமாக பாஜக தலைமையின் ஆதரவை நேரடியாகவே கேட்டு பெறுவார் என்றும் கடந்த வார முழுவதும் செய்திகள் வலம்வந்த நிலையில், அதற்கான அச்சாரம்தான் இன்றைய தினம் போடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. இந்த சந்திப்பின் தாக்கங்கள் இன்னும் ஓரிரு நாளில் தமிழகத்தில் தெரியவரும் என்றும் சொல்கிறார்கள்.. ஆனாலும், குஜராத் நிகழ்வில் ஓபிஎஸ் பங்கேற்றதைவிட, அவரது தோளில் அலங்கரித்த காவித்துண்டுதான் இணையத்தில் இன்றைய தினம் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications