"பச்சைக்கொடி?".. உதயசூரியன் "கிழக்கில்" உதிக்குதா.. எப்படி பார்த்தாலும் பிளஸ் போல இருக்கே..பலே திமுக
நடக்க போகும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்புள்ளதாக என்ற கேள்வி எழுகிறது
சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி என்ன முடிவெடுக்க போகிறது என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியாத நிலையில், பல்வேறு அனுமானங்களும், யூகங்களும் வெடித்து கிளம்பி வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி
வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்ரவரி 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்புகள் எகிறி வந்தநிலையில், தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், அதற்கான பரபரப்புகள் மேலும் கூடிவருகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் கூட்டணிக்கே தொகுதியை ஒதுக்க அதிமுக யோசித்து வருவதாக தெரிகிறது.

உதயசூரியன்
மேலும் சின்னம் பிரச்சனையும் அதிமுகவுக்கு உள்ளதால், புது சின்னத்தில் போட்டியிட்டு ரிஸ்க் எடுக்காமல், அதேசமயம், திமுக கூட்டணியிடமும் தோல்வியடையாமல், சாதுர்யமாக கூட்டணிக்கே தொகுதியை ஒதுக்க அதிமுக முடிவெடுக்கும் என்கிறார்கள்.. அதேபோல திமுக தரப்பிலும் இந்த தொகுதியை காங்கிரஸ் கேட்டு வருவதாக தெரிகிறது. முதல்வர் ஸ்டாலினும், கூட்டணிக்கே இந்த தொகுதியை ஒதுக்க யோசித்திருப்பதாக கடந்த வாரமே ஒரு செய்தி வந்தது.

சான்ஸ் யாருக்கு
அதாவது, "காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஜெயித்த தொகுதி. அதனால் அவரின் மனநிலையை குறிப்பாக அவரது விருப்பத்தை அறிந்து கொள்வது முக்கியம். இளங்கோவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு காங்கிரஸ் தலைமை வாய்ப்பளிக்கும் பட்சத்தில், காங்கிரசுக்கே மீண்டும் இந்த தொகுதியை ஒதுக்கலாம். செல்வாக்கில்லாத காங்கிரஸ்காரர் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதாக இருந்தால் திமுகவே போட்டியிடலாம். ஏனெனில், வேறு யாருக்காவது தொகுதியை ஒதுக்கி அவர் தோற்றுப்போனால் அது காங்கிரசை மட்டுமல்ல திமுகவையும் திமுக ஆட்சியையும் அரசியல் ரீதியாக பாதிக்கும். அதனால் காங்கிரசின் முடிவு என்னவாக இருக்கிறது என தெரிந்து முடிவு செய்துகொள்ளலாம்" என்றாராம்.

ஈவிகேஎஸ் சீனியர்
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியானது.. அத்துடன் தொகுதியில் தேர்தல் பணியையும் காங்கிரஸ் தரப்பு தொடங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. இளங்கோவனே நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றால், சீனியர் என்ற முறையில், சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு தகவலும் கசிந்துள்ளது.. காங்கிரஸ் சார்பில் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் அல்லது இறந்து போன திருமகன் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர், இங்கு வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று காங்கிரசார் எதிர்பார்க்கிறார்களாம்.

பிளஸ் பாயிண்ட்
அல்லது திமுகவுக்கே காங்கிரஸ் தொகுதியை, தானாக முன்வந்து விட்டுக்கொடுத்தால், அது திமுகவுக்கு மேலும் பிளஸ் ஆக அமையும் என்கிறார்கள்.. காரணம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களால், கடந்த ஒன்றரை வருட ஆட்சி மீது மக்கள் ஆங்காங்கே அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த தேர்தலில் திமுகவே நேரடியாக நின்று வெற்றிபெற்றால், அது ஆளும்கட்சியின் மதிப்பை மக்களிடம் மேலும் பெருக்கும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கெல்லாம் ஒரு பதிலடி தந்ததுபோல இருக்கும் என்றும் கணக்கு போடப்படுகிறது..

பச்சை கொடி
திமுகவுடன் நல்ல புரிதலில் இளங்கோவன் உள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் காமராஜர் விருதும், இளங்கோவனுக்கே வழங்கப்பட்ட நிலையில், தொகுதியை மேலிட காங்கிரஸ் விட்டுத்தர முன்வருமா என தெரியவில்லை.. ஒருவேளை தொகுதியை விட்டுக்கொடுத்தால், வரும் எம்பி தேர்தலில் ஈரோடு தொகுதியில் இளங்கோவனுக்கு போட்டியிடவும் திமுக முன்வந்து வாய்ப்பு வழங்கும் என்கிறார்கள்.. எனினும், இங்கு யார் வேட்பாளர் என்பது உறுதியாகும்வரை, இப்படியான யூகங்களும், அனுமானங்களும் வெடித்தபடியே உள்ளன.. அதேசமயம், ஈரோடு கிழக்கில், ஈவிகேஎஸ் நின்றாலும் சரி, திமுக நின்றாலும் சரி, யார் நின்றாலும், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்று பெருத்த நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் திமுக கூட்டணியினர்..!!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications