உயர பறந்த சின்ன வெங்காயம்.. இப்ப கிலோ விலை எவ்ளோ தெரியுமா? தமிழ்நாட்டில் இல்லத்தரசிகளுக்கு செம குஷி
சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே காய்கறிகளின் விலைகள் உயர்ந்து வரும்நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை ஆச்சரியத்தை தந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?
தமிழகத்தை பொறுத்தவரை, திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, கோவை தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகள்ல சின்ன வெங்காயம் நிறைய பயிரிடப்படுகிறது...

சின்ன வெங்காயம்: கடந்த வருடம், தக்காளி விலை உயர்ந்தபோதே, சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது... தக்காளி ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்றதைபோலவே, ஒரு கிலோ சின்ன வெங்காயமும் ரூ.200 வரை விற்பனையானது. அதற்கு பிறகு மெல்ல மெல்ல சின்ன வெங்காயம் விலை குறைந்தாலும், 100 ரூபாய்க்கு கீழே விற்கப்படவில்லை.
ஆனால், இந்த ஒரு வார காலமாகவே, சின்னவெங்கயம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.. 4 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற சின்ன வெங்காயம், இப்போது வெறும் ரூ.35-க்கு விற்கப்படுகிறது.. பெரிய வெங்காயமும் கிலோ ரூ.25-க்கு விற்பதால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு காரணம், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரத்து அதிகரித்து அதிகமாகிவிட்டதாம்.. அதனால்தான் விலையிலும் சரிவு காணப்படுவதாக சொல்கிறார்கள்.
விவசாயிகள்: கடந்த சில மாதங்களாகவே விலை உயர்ந்திருந்ததால், விவசாயிகள் ஆர்வத்துடன் சின்ன வெங்காயத்தை பயிரிட்டனர்... ஆனால் வடகிழக்கு பருவமழை வந்துவிடவும், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தின் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துவிட்டதாக தெரிகிறது.
அதேபோல, உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு, மார்ச் 2024 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதும் வெங்காயம் விலை சரிவுக்கு இன்னொரு காரணமாக சொல்கிறார்கள்.
கோரிக்கை: வெங்காய விலை சரிந்துள்ளது, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை உண்டுபண்ணி வருகிறது.. அதனால்தான், வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விலக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.!!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications