"லீக்"கான "சீக்ரெட் டீல்".. ஓபிஎஸ் வண்டிய பார்த்ததுமே.. எகிறிய எடப்பாடி டீம் .. அப்ப அதுவா
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைவராக நிறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது
சென்னை: ஓபிஎஸ் கட்சி ஆபீசுக்கு வர போகிறார் என்ற தகவல் கிடைத்ததுமே, ஆலோசனை நடத்தி கொண்டிருந்த எடப்பாடி டீம் ஆளுக்கு ஒரு பக்கம் தலைதெறிக்க கிளம்பி போய்விட்டதாம்.. அப்படியானால் ஓபிஎஸ்-க்கான கிரேஸ் கூடிவிட்டதா? என்ன நடக்க போகிறது கட்சிக்குள்?
இத்தனை நாளும் உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்த பொதுச்செயலாளர் பதவி விவகாரம் வெடித்து கிளம்பி உள்ளது.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பினர் வெளிப்படையாகவே அதிருப்திகளை கொட்ட ஆரம்பித்துவிட்டனர்.
Recommended Video
ஓபிஎஸ் ஒரு பக்கமும், எடப்பாடி மறுபக்கமும் கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில், எடப்பாடி பழனிசாமிக்கு போதுமான ஆதரவுகள் கிடைத்து வருவதாக தெரிகிறது.

மெஜாரிட்டி
இப்போது இரு தரப்புமே அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக அவர்கள் வீடுகளில் பேசி வருகின்றனர். வரும் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்க உள்ள நிலையில், அதற்குள் ஒரு முடிவை ஆலோசித்து எடுக்கவும் தலைவர்கள் தயாராகி வருகிறார்கள்.. முன்னதாக, ஒற்றை தலைமையைக் கொண்டு வர வேண்டும் என்று மெஜாரிட்டி தரப்பினர் கருத்தை முன்வைக்க, அந்த கூட்டம் முடிவு எதுவும் எட்டப்படாமல், திருப்தியும் இல்லாமல் முடிந்திருக்கிறது.

தலைதெறிக்க ஓடிய மாஜி
இன்றைக்கும் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில், சிவி சண்முகம் தலைமையில் நடந்துள்ளது.. அப்போது இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க திடீரென்று ஓபிஎஸ் வருகிறார் என்ற தகவல் கிடைத்ததுமே, ஆலோசனைக் கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு வேகவேமாக கிளம்பி சென்றுவிட்டாராம் சிவி சண்முகம்.. ஓபிஎஸ் வருகிறார் என்று சொன்னதும் எடப்பாடி டீம் தலைதெறிக்க ஓடியதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தலைவர் பதவி
உண்மையிலேயே ஓபிஎஸ்ஸுக்கு மவுசு கட்சிக்குள் உள்ளதா? அந்த அளவுக்கு ஆதரவுகளை மா.செ.க்கள் வழங்கி வருகிறார்களா? பெரும்பாலான நிர்வாகிகள் ஓபிஎஸ் தலைமையை ஏற்று கொள்கிறார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு சாதகமான பதில்கள் இல்லை என்றே தெரிகிறது.. முதல்வர் வேட்பாளர் பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவி என ஒவ்வொன்றையும் எடப்பாடியிடம் தந்துவிட்டு ஓபிஎஸ் இன்றைக்கு பின்னுக்கு தள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சீக்ரெட் டீல்
இதனிடையே ஒரு சீக்ரெட் டீல் ஒன்றினை, எடப்பாடி டீம் ஓபிஎஸ் தரப்பிடம் பேசி வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.. அதாவது, "இந்த முறை எடப்பாடிக்கே சீட்டை விட்டுத்தந்துவிடுங்கள்.. இப்போதைய சூழலில், கட்சி நிர்வாகிகள் அவர் பக்கம்தான் நிறைய உள்ளனர்.. சட்டசபை தேர்தலில் நிறைய எம்எல்ஏக்களை பெற்று தந்துள்ளது தென்மண்டலங்கள்தான்.. கொங்குவையும் தாண்டி, தென்மண்டலங்களிலும் எடப்பாடிக்கான ஆதரவு உள்ளது.. 80 சதவீதத்துக்கும் மேல் மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் உள்ளனர்.. 4 வருட ஆட்சியில் பெரிதாக சர்ச்சையில் சிக்காமல், நல்ல பெயரை பெற்றுள்ளார்..

பிளஸ் பாயிண்ட்
இப்படிப்பட்ட பிளஸ் பாயிண்ட்டுகள் உள்ளவர் கையில் கட்சி தலைமையை தந்தால்தான், அது எடுபடும்.. திமுக போன்ற கட்சிகளையும் சமாளிக்க முடியும்.. ஒருவேளை, யாருக்கு ஆதரவு என்ற வாக்கெடுப்பை, கையில் எடுத்துவிட்டால், உங்களுக்குதான் ஓட்டுக்குள் குறைவாக விழும்.. இதனால், இருக்கும் மதிப்பும் குறைய வாய்ப்புண்டு.. அந்த அளவுக்கு போகாமல், எடப்பாடியையே தலைவராக இருக்க வழிவிடுங்கள்.. உங்கள் மகனுக்கு டெல்லியில் சீட் விவகாரம் உட்பட அனைத்தையும் கட்சி பார்த்து கொள்ளும்" என்று பேசிவருகிறார்களாம்..

நம்பர் 2
ஒருவேளை இந்த தகவல் உண்மையானால், இதற்கெல்லாம் ஓபிஎஸ் ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை.. ஏற்கனவே ஜெயலலிதா இருக்கும்வரை, இரண்டாம் இடத்திலேயே இருந்தார்.. எடப்பாடி ஆட்சியிலும் இரண்டாம் இடம் என்றால் இனியும் தனக்கு இரண்டாம் இடம்தானா? என்ற கவலைக்குரிய கேள்வியை அவரை சூழ்ந்துள்ளது.. தொடர்ந்து கூட்டங்கள் நடந்து கொண்டிருப்பதால், இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.. பார்ப்போம்...!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications