சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அருவாளை தூக்கி ஆவேசமான வீரலட்சுமி.. வீடியோ அனுப்பியவரை தூக்கிய சென்னை போலீஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமிக்கு வாட்சாப்பில் ஆபாச வீடியோ அனுப்பியதாக சென்னை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி(38) என்பவரை கேரளாவின் மலப்புரத்தில் வைத்து கைது செய்த போலீசார், அவரை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Recommended Video

    Veeralakshmi-யின் அனல் தெறிக்கும் பேச்சு - அரபு நாட்டு தண்டனை கொடுப்பேன்

    தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி தனக்கு மர்ம நபர் ஒருவர் வாட்சாப்பில் ஆபாச வீடியோ அனுப்பியதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .

    மகா., கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலை தருகிறது: 6 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மோடி மகா., கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலை தருகிறது: 6 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மோடி

    வழக்குப்பதிவு செய்த போலீசார் மூன்று மாதங்களாக ஆபாச வீடியோ அனுப்பியவர்களை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    வீரலட்சுமி கோபம்

    வீரலட்சுமி கோபம்

    இதற்கிடையில் வீரலட்சுமி முதலில் இரு வீடியோ பதிவு செய்து வெளியிட்டார். அதில் காவல் துறையினர் ஆபாச வீடியோ அனுப்பியவரை கைது செய்யவில்லை என்றால் தாங்களே அவனை பிடித்து மர்ம உறுப்பை அறுத்து பல்லாவரம் சந்தையில் கட்டிப்போடுவோம் என்று கூறியிருந்தார்.
    பின்னர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினர். சமீபத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்து அதில் கையில் அரிவாளை வைத்து கொண்டு அவரது பாணியிலேயே ஏகவசனம் பேசியிருந்தார். இந்நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் கொடுத்தார்.

    ஆரோக்கியசாமி கைது

    ஆரோக்கியசாமி கைது

    அதன் பிறகு வழக்கு தொடர்பாக அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி(38), என்பவரை சங்கர் நகர் போலீசார் கேரளா சென்று கைது செய்தனர். கேரள மாநிலத்தில் மலப்புரத்தில் டிரில்லிங் மெஷின் ஆபரேட்டர் ஆக பணிபுரிந்து வரும் ஆரோக்கியசாமியை கைது செய்து நேற்று நள்ளிரவு சென்னை அழைத்து வந்தனர்.

    வாட்ஸ்அப்பில் படம்

    வாட்ஸ்அப்பில் படம்

    விசாரணையில் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பெண் என்பதால் அதில் இருந்த எண்ணிற்கு ஆபாசமாக வீடியோக்களை அனுப்பி பார்த்தேன், ஆனால் சில நாட்களில் தன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதாக வாட்ஸாப்பில் எனக்கு அனுப்பினார்.

    சிறையில் அடைப்பு

    சிறையில் அடைப்பு

    அதற்கு பிறகு நான் செல்போனை அணைத்து வைத்து விட்டேன். மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நான் முகநூல் மூலம் தூது விட்டு தற்போது சிக்கிக் கொண்டதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து ஆரோக்கியசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் இன்று காலை அடைத்தனர்.

    English summary
    thamizhar munnetra padai Veeralakshmi had lodged a complaint with the Chennai police alleging that mysterious persons had sent her a video on WhatsApp. The police arrested Arokyasamy (38) from Andimadam, Ariyalur district in Malappuram, Kerala, brought him to Chennai, produced him in court and remanded him in custody.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X