யாருக்கும் இந்நிலை வரக்கூடாது.. அரசு டாக்டர்களை கைது செய்யனும் - இறந்த வீராங்கனை தந்தை ரவி கோரிக்கை
சென்னை: 2 அரசு மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக கால் அகற்றப்பட்ட 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில் அரசு மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது தந்தை ரவி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவி. இவர மகள் பிரியா. 17 வயது கால்பந்து வீராங்கனையான இவர் மாவட்ட, மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இந்த நிலையில் இவருக்கு வலது காலில் ஜவ்வு பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தபோது அவருக்கு ரத்த ஓட்டம் தடைபட்ட நிலையில் கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

அரசு மருத்துவமனை
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பிரியாவின் வலது காலில் ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக 7 ஆம் தேதி சென்னை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் இதற்கு சிகிச்சை மேற்கொள்ள சென்றார் பிரியா. அவருக்கு மருத்துவர்கள் அதிநவீன சிகிச்சையை செய்தனர்.

இறுக்கமான கட்டு
ஆனால், கவனக்குறைவாக சிகிச்சைக்கு பிறகு இறுக்கமாக கட்டு போட்டுள்ளார்கள். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்கள் பழுதாகின. இதன் காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 8 ஆம் தேதி அவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

உறுப்புகள் பாதிப்பு
அவருக்கு அனைத்து துறை மருத்துவ வல்லுநர்களும் உன்னிப்பாக கவனித்து மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்கள். ரத்த நாளங்களின் பாதிப்பு காரணமாக ரத்த ஓட்டம் நின்றுவிட்டதால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் சிறுநீரகம், ஈரல், இதய பாதிப்பு ஏற்பட்டது.

உயிரிழப்பு
ரத்த ஓட்டம் தடைபட்டதால் தொடர்ச்சியாக அவரது உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில் இன்று காலை 7:15 மணிக்கு பிரியா காலமானார். இதனை அடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மா.சுப்பிரமணியன்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இது ஈடு செய்ய முடியாத இழப்பு. 2 நாட்களுக்கு முன் பிரியாவின் உடல்நிலை பாதிப்பு பற்றி அறிந்தவுடன் முதலமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்து, இதுகுறித்து விசாரிக்க மருத்துவ வல்லுநர் குழுவை அமைத்தோம். அந்த குழு பெரியார் நகர் மருத்துவமனையில் விசாரித்தபோது, அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்களின் கவனக்குறைவு இதற்கு ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டது.

நடவடிக்கை
நேற்று காலை 2 பேரும் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டார்கள். தொடர் விசாரணை நடத்தி துரை ரீதியாக விசாரணை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் இருவரும் இன்று பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். போலீசில் புகாரளித்து சட்ட நடவடிக்கையும் எடுப்போம்.

நிவாரணம்
வீராங்கனையின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணத்தை உடனடியாக வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதேபோல் பிரியாவின் குடும்பத்தின் வறுமை நிலையை மனதில் வைத்து அவரது சகோதரரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முடிவெடுத்து உள்ளோம்.

தந்தை கோரிக்கை
இந்த நிலையில் தனது மகள் பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என அவரது தந்தை ரவி வலியுறுத்தி இருக்கிறார். இது இதுபோல் எந்த நிகழ்வும் அரசு மருத்துவமனையில் நடக்கக்கூடாது என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications