வார்னிங்கே தரவில்லை.. 17 ரவுண்டு ஒரே ஆளாக சுட்டுத் தள்ளிய சுடலை கண்ணு! பகீர் அருணா ஜெகதீசன் அறிக்கை!
சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு தனி ஆளாக அபாயகரமான துப்பாக்கியை கொண்டு மொத்தம் 17 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை கடந்த மே மாதம் 18ந் தேதி தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு! 17 போலீசார் மீது நடவடிக்கை தேவை.. அருணா ஜெகதீசன் அதிரடி அறிக்கை

அருணா ஜெகதீசன் அறிக்கை
இந்த அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அறிக்கை குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்க பயன்படுத்தும் Public Addressing System (அ) நன்றாக கேட்கக்கூடிய மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படவில்லை.

ஒருங்கிணைப்பு இல்லை
துப்பாக்கி சூடு நடத்திய போது கூட காவல் உயர் அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. துப்பாக்கிச் சூடு நடத்திய கன் மேன்கள் எனப்படும் ஷூட்டர்களுக்கு கொடுத்த கட்டளை மற்ற அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் பின்னந்தலை வழியாக குண்டு துளைத்து முன் வழியாக உள்ளுறுப்புகளை சிதைத்து குண்டு வெளியே வந்திருக்கிறது.

ஓடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
சிலருக்கு முதுகின் பின் பகுதியிலும் குண்டு துளைத்து இதயம் போன்ற முக்கிய பகுதியை சிதைத்து மார்பின் முன்பகுதி வழியாக வெளியேறியதும் ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருக்கிறது என்பதை காட்டுகிறது. மேலும் இடுப்புக்கு கீழே யாரையும் சுடவில்லை.

கடமை தவறிய ஆட்சியர்
அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கடமையிலிருந்து தவறியதும், அவரது அலட்சியமான நடவடிக்கையே போராட்டம், துப்பாக்கிச்சூட்டில் முடிய அடித்தளமாக இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 10 லட்சமும் வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications