மருத்துவப் பணியாளர்களை கைது செய்தது ஏன்? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்களை கைது செய்தது ஏன் என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார். மேலும் "பேச்சுவார்த்தை நடத்திய 5 நாட்களுக்குள் மீண்டும் போராடுவது நியாயமில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.

Arunraj

பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வேண்டும் என்ற வாசகத்துடன் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளுடன், இருசக்கர வாகன விழிப்புணர்வு அணிவகுப்பை அமைச்சர் அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் எச்.ஐ.வி , எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த உறுதிமொழியை அமைச்சர் அருண்ராஜ் படிக்க மாணவர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

அது குறித்தான விழிப்புணர்வு காணொலியை வெளியிட்டு, எச்.ஐ வி , எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பின்னர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்தான விழிப்புணர்வு மக்களிடம் முறையாக செல்ல வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை 2010-ல் 0.4 சதவீதமாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு அந்த பாதிப்பு பாதிக்கு பாதியாக குறைந்தது.

தமிழ்நாட்டில் 51 கூட்டு மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் கட்டணமின்றி எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரிசோதனை செய்துக் கொள்ளலாம். எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட மாணவர்களுக்கு மருந்து சிகிச்சை மற்றும் தொடர் ஆலோசனை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எச்ஐவி பாதிப்பு

எச்ஐவி பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எச்ஐவி பரவுவதை தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. எச்ஐவி பாதித்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கும், சத்தான உணவு, இடையில்லா கல்வி, தொடர்ச்சியான சிகிச்சை பெறுவதற்கும் சமூகப் பாதுகாப்பு மிகவும் அவசியம்.

மானியக் கோரிக்கை

இதனை கருத்தில் கொண்டு 2026-2027-ஆம் ஆண்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கையில் தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி பெற்றோர் இருவரையும் இழந்த எச்ஐவி தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கு மாதம் 3000 ரூபாயாகவும், பெற்றோரில் ஒருவரை இழந்து எச்ஐவி தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாயாகவும் , பெற்றோர்களுடன் வாழும் எச்ஐவி தொற்றுள்ள குழந்தைகளுக்கு மாதம் 1500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

நவம்பர் மாதம் முதல் உதவித்தொகை

இத்திட்டத்திற்கு கூடுதலாக ரூபாய் 1.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் முதல் எச்ஐவி தொற்று உடன் வாழும் குழந்தைகள் பயன் பெறுவார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களையும் சந்தித்தார். அவரிடம் மருத்துவ பணியாளர்கள் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், மருத்துவ பணியாளர்களுடன் கடந்த வாரம் தான் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

5 நாட்களில் மீண்டும் போராட்டம்

பேச்சுவார்த்தை முடிந்த ஐந்து நாளில் போராட்டத்தை நடத்துவது நியாயம் இல்லை. மீண்டும் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளோம். சட்டபேரவையில் அறிவித்த செவிலியர் கல்லூரிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கொளத்தூர் பாபு

அது போல் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாபுவின் உடல் நலம் குறித்த கேள்விக்கு, "கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நன்றாக உள்ளார். தொடர்ந்து அவருக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+