சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலின் கிரீன் சிக்னல்.. சென்னையில் கடுமையாகும் லாக்டவுன் விதிகள்.. ககன்தீப் சிங் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் லாக்டவுன் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே 10ம் தேதியில் இருந்து லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முழு லாக்டவுன் போடப்பட்டாலும் கூட மக்கள் தொடர்ந்து வெளியே செல்வதும், தேவையின்றி சுற்றுவதும் அதிகமாகி வருகிறது.

கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்கள்.. எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்..புதிய பரிந்துரைகள் என்னகர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்கள்.. எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்..புதிய பரிந்துரைகள் என்ன

சென்னையில் லாக்டவுன் போடப்பட்டதற்கான அறிகுறியே சில பகுதிகளில் தெரியவில்லை. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை செய்தார்.

விதிகள்

விதிகள்

லாக்டவுன் தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று ஸ்டாலின் இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் குறிப்பிட்டார். அதோடு விதிகளை தீவிரமாக்க ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். விதிகளை கண்டிப்பாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வருக்கு ஆலோசனை வழங்கின.

கூடுதல் விதி

கூடுதல் விதி

இந்த நிலையில் முதல்வரே லாக்டவுன் குறித்து வருத்தப்பட்டதை அடுத்து தற்போது சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் லாக்டவுன் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தொடர்பாக காவல் ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் இன்று ஆலோசனை செய்தனர்.

ஆலோசனை

ஆலோசனை

இந்த ஆலோசனையின் முடிவில் லாக்டவுன் விதிகளை மீறுவோரை கண்காணிக்க 30 குழுக்கள் சென்னையில் அமைக்கப்பட்டது. அதிகாரிகள், போலீசார் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. மக்களை சென்னை முழுக்க கண்காணிக்க இந்த குழு களமிறக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாளையில் இருந்து சென்னை முழுக்க தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள்.

ரோந்து

ரோந்து


சென்னையில் தேவையின்றி வெளியே செல்லும் நபர்கள், 12 மணிக்கு பின் திறக்கப்படும் கடைகள், பைக்கில் சுற்றும் நபர்கள் எல்லோரையும் விசாரிக்கவும், அபராதம் விதிக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். விதிகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். இதனால் நாளையில் இருந்து சென்னையில் கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன.

English summary
As Tamilnadu CM MK Stalin talks about the increase in lockdown regulations at all party meet, Chennai goes for strict rules from tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X