இப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்!

சென்னை வானிலையில் இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக இருக்க போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக்கில் போஸ்ட் செய்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    weatherman| தென்மேற்கு பருவமழையின் அற்புதமான நாள்.. தமிழ்நாடு வேதர்மேன்

    சென்னை: சென்னை வானிலையில் இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக இருக்க போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக்கில் போஸ்ட் செய்து இருக்கிறார்.

    குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியையொட்டி இந்திய பெருங்கடல் வரை நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது.

    இதனால் இதனால் தமிழகத்தில் நேற்று மாலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    சென்னை எப்படி

    சென்னை எப்படி

    சில மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது. காலையில் இருந்து சென்னையில் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக வானிலை குறித்தும் சென்னை மழை குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக்கில் போஸ்ட் செய்து இருக்கிறார்.

    தக்காளி சட்னி

    தக்காளி சட்னி

    அதில், சென்னையின் வானத்தில் தக்காளி சட்னி போல சிவப்பாக இருக்கிறது (மழை பெய்யும் குறியீடு) இதனால் சென்னையில் மழைக்காலம் போல செமையாக இன்று மழை பெய்ய போகிறது. இதனால் சூரிய உதயத்திற்கு பின்பும் சென்னையில் மழை பெய்யும். இது போன்ற நாட்கள் வருவது கடினம்.

    எங்கு

    எங்கு

    இப்போதே இதை நன்றாக என்ஜாய் செய்யுங்கள். மழையை பொறுத்தவரை மொத்த வடதமிழகத்திற்கும் இது மிக சிறப்பான நாளாக இருக்க போகிறது. அதேபோல் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மிக சிறப்பான மழை நாளாக இது இருக்க போகிறது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், கடலூரில் 100 மிமீ மழை கூட பெய்யும்.

    என்ன அறிக்கை

    என்ன அறிக்கை

    அதேபோல் தர்மபுரி, திருவண்ணாமலை. வெள்ளாறு, கிருஷ்னகிரி, பாண்டிச்சேரியில் இன்று மிக கனமழை பெய்யும். அதிலும் வேலூரில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது, என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+