சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசத்தும் அசானி புயல்.. அடுத்த 4 நாட்களுக்கு மழை.. மினி ஊட்டியாகும் சென்னை.. ஆஃப் மோடில் ஃபேன்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு அசானி புயலால் மழை கிடைக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அசானி புயல் ஆந்திரா மாநிலத்தில் மசூலிப்பட்டினம்- நர்சாபூர் இடையே கரையை கடந்தது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. ஏனாம்- காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தமிழகத்தில் 5 நாட்களுக்கு கூல் கிளைமேட்தான்... 14ல் மழை அடி வெளுக்கும் - எங்கே தெரியுமா? தமிழகத்தில் 5 நாட்களுக்கு கூல் கிளைமேட்தான்... 14ல் மழை அடி வெளுக்கும் - எங்கே தெரியுமா?

இந்த நிலையில் அசானி புயலால் வடதமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அது போல் வடகடலோர மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது.

வடதமிழகம்

வடதமிழகம்

சுருக்கமாக சொல்ல போனால் வட தமிழகத்தில் மழை, தென் தமிழகத்தில் மத்தியமான நிலை, மேற்கு மண்டலத்தில் குளிர் என பல தரப்பட்ட வானிலை தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் சென்னையில் அக்னி வெயிலால் மக்கள் அவதியடைந்து வந்தார்கள். தினந்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது வெப்பநிலை.

இயற்கை கருணை

இயற்கை கருணை

இதனால் இயற்கை கருணை காட்டுமா என மக்கள் ஏங்கினர். அதற்கேற்ப ஆபத்பாந்தவனை போல் வந்தது அசானி புயல். இது வலுவிழந்தாலும் மேலடுக்கு சுழற்சியால் வடதமிழகத்திற்கு மழையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் முதலே தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் வெயில்

சென்னையில் வெயில்

சென்னையில் வெயில் போய் குளிர் நிலவுகிறது. இந்த மழை வார இறுதியிலும் தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் தனியார் வெதர் பிளாக்கர் ரிஷி ஜவஹர் கூறுகையில் அசானி புயல் மேலடுக்கு சுழற்சியாக வலுவிழந்து வங்கக் கடலுக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    Asani Landfall In Coastal Andhra | அமைதியாக கரையைக் கடந்த Asani | Oneindia Tamil
    3 முதல் 4 நாட்களுக்கு மழை

    3 முதல் 4 நாட்களுக்கு மழை

    இதனால் வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையோரங்களில் வலுவான காற்று நிலையற்று வீசி வருகிறது. இது அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு புயல் காற்றை உருவாக்கும். இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

    English summary
    Asani Cyclone (அசானி புயல்): அசானி புயல் வங்கக் கடலில் கலக்கும் போது மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு நல்ல மழையை கொடுக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X