அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்.. நிதியமைச்சர் சட்டசபையில் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் வரும் நாட்களில் உறுதியாக செயல்படுத்தப்படும்.. அதற்கான விதிகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என நிதியமைச்சர் மரியா வில்சன் தமிழக சட்டசபையில் இன்று உறுதி அளித்துள்ளார்.

சட்டசபையில் இன்று நிதியமைச்சர் மரியா வில்சன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகையில், "அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்டது. அவர்கள் மூன்று பரிந்துரைகள் செய்திருந்தார்கள். அந்த பரிந்துரைகளை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும். அவர்கள் வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்கள். அது கேரண்டி பென்ஷனாக கொடுக்கப்படும். இரண்டாவது பரிந்துரையாக கிராஜிவிட்டி கேட்டிருந்தார்கள். அதுவும் நிச்சயம் இருக்கும்.

Pension Scheme

அதில் குடும்ப ஓய்வூதியமும் குறிப்பிட்டிருந்தார்கள்..அதுவும் நிச்சயம் இருக்கும். தற்போதைக்கு நாங்கள் இடைக்கால நிவாரணம் கொடுக்க தொடங்கிவிட்டோம்.. இப்போது நாங்கள் என்ன செய்கிறோம் என்றால், அதற்கான விதிகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆப்ரேஷன் கைடுலைன்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் வரும் நாட்களில் உறுதியாக செயல்படுத்தப்படும்" இவ்வாறு மரியா வில்சன் கூறினார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த அரசு ஊழியர்களுக்கு தவெக அரசின் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை தந்துள்ளது. 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை அமல்படுத்துவது என அறிவித்த பிறகு 23 ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத்திட்டம் என்பது எட்டாத கானியாக மாறிவிட்டது. அண்மையில் மத்திய அரசுமே, இனிமேல் அரசு ஊழியர்களுக்கு எந்த காலத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துவிட்டது. அதே பாணியில் தான் மாநில அரசும் முடிவெடுத்துள்ளது. திமுக அரசு கொண்டு வந்துள்ள டிபிஎஸ் திட்டம், அதாவது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்துவோம் என்று அறிவித்துவிட்டது.

விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு அரசு நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருந்தது என்ன:

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்கில் 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம்' (டேப்ஸ்) கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அதற்கான விரிவான விதிமுறைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் விதிகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை இடைக்கால ஏற்பாடாக மாதாந்திர வாழ்வாதாரத்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அல்லது அதற்குப்பிறகு முறையான பணியில் சேர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (சி.பி.எஸ்.) இடம் பெற்றுள்ள அரசு ஊழியர்கள், கடந்த ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்குப்பிறகு குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்து வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறுபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.

அவர்களுக்கு கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தின் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதிகமோ அந்தத்தொகையுடன் அகவிலைப்படி நிவாரணத்தின் 50 சதவீதம் சேர்த்து மாதந்தோறும் இடைக்காலத் தொகை வழங்கப்படும்.

அதேபோல கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதிக்கு பிறகு பணியில் இருக்கும்போது மரணமடையும் அரசு ஊழியர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கும் இடைக்கால குடும்பத்தொகை வழங்கப்படும். இறந்த ஊழியரின் கடைசி அடிப்படை ஊதியத்தின் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதிகமோ அந்தத்தொகையுடன் 50 சதவீத அகவிலைப்படி நிவாரணம் சேர்த்து வழங்கப்படும்.

இடைக்காலத்தொகை பெற்று வந்த ஓய்வூதியர் பின்னர் மரணமடைந்தால், அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால மாதாந்திரத் தொகையின் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த இடைக்காலத் தொகையைப் பெற விரும்பும் ஓய்வூதியர்கள் மற்றும் தகுதியான குடும்ப உறுப்பினர்கள், அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் உரிய உறுதிமொழி படிவத்தில் விருப்பம் தெரிவிக்க வேண்டும். இடைக்காலத்தொகை ஓய்வு பெற்ற அல்லது மரணமடைந்த தேதிக்கு அடுத்த நாளில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+