கிளைமேட் மாறுதே.. சிஎம் ஆவாரா சி.ஜோசப் விஜய்! அடித்துச் சொல்லும் Axis My India! சொன்னது பலிக்குமா?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) வெளியிட்ட கணிப்பு இந்த முறை அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், பெரும்பாலான கணிப்புகள் திமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ள நிலையில், இந்த நிறுவனம் மட்டும் முதன்முறையாக தேர்தலில் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த கணிப்பின் படி, தமிழக வெற்றி கழகம் 98 முதல் 120 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும், திமுக 92 முதல் 110 இடங்கள் வரை மட்டுமே பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிமுக கூட்டணி 22 முதல் 32 இடங்களில் தான் வெற்றி பெறும் எனவும் அந்த கணிப்பு தெரிவித்துள்ளது.

இதனால், தமிழக அரசியலில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்து நேரடியாக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு தமிழக வெற்றி கழகம்க்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குள் தான் ஆட்சிப் போட்டி இருந்து வந்தது.
தமிழக வெற்றி கழகம்
ஆனால் இந்த முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் களம் இறங்கியதால் அரசியல் கணக்குகள் முழுவதும் மாறியுள்ளன. இதனால் தான் பல கணிப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட முடிவுகளை கூறுகின்றன.
இந்நிலையில், ஆக்சிஸ் மை இந்தியா முன்பு வெளியிட்ட கணிப்புகள் எவ்வளவு துல்லியமாக இருந்தன என்பதும் தற்போது பேசப்படுகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் இந்த நிறுவனம் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி இருக்கும் என கணித்திருந்தாலும், இறுதியில் அதிமுக 136 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது.
ஆக்சிஸ் மை இந்தியா
அதேபோல் 2021 தேர்தலில்,ஆக்சிஸ் மை இந்தியா திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என அதிக அளவில் கணித்திருந்தது. ஆனால் இறுதி முடிவில் திமுக 133 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்தது. இதனால், அந்த கணிப்புகள் முழுமையாக துல்லியமாக இல்லாவிட்டாலும், ஒரு அளவுக்கு மக்களின் ஆதரவு போக்கை காட்டியதாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், இந்த முறை வெளியான கணிப்பும் எவ்வளவு நம்பகமானது என்ற கேள்வி எழுகிறது.
நடிகர் விஜய்
குறிப்பாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்கள் கிடைக்கும் என்ற கணிப்பு பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் மற்ற நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகள் பெரும்பாலும் திமுகக்கு சாதகமாகவே உள்ளன. அரசியல் நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், இந்த முறை வாக்கு சதவீத மாற்றம், புதிய வாக்காளர்கள், சமூக வலைதளங்களின் தாக்கம் போன்ற பல காரணிகள் தேர்தல் முடிவுகளை கணிப்பதை கடினமாக்கியுள்ளது.
தேர்தல் கணிப்பு
அதனால் தான் ஒரே மாதிரியான கணிப்பு எங்கும் வரவில்லை. மொத்தத்தில், ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு உண்மையாகவே பலித்து தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் நிலை வருமா? அல்லது வழக்கம் போல் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்பது மே 4ஆம் தேதி வெளியாகும் முடிவுளின் போது தான் தெளிவாக தெரிய வரும். அதுவரை இந்த கணிப்புகள் அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதமாகவே நீடிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications